என்னதான் வீட்டில் பார்த்து பார்த்து சமைத்தாலும் ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையில் இல்லை என்று நிறைய பேர் சொல்வார்கள். அதிலும் ரோட்டுக்கடை கல் மீன் என்றாலே தனி சுவை தான். அதே மீனை வீட்டில் வறுத்தால் அண்ந சுவை வருவதில்லை. ஆனால் இந்த முறையில் செய்து பாருங்கள். ரோட்டு கடை வௌவாள் கல் மீன் வறுவல் வீட்டிலேயே எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கடலை மாவு
தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை
இஞ்சி
பூண்டு
காஷ்மீரி ரெட் சில்லி
உப்பு
மஞ்சள் தூள்
கொத்தமல்லி தூள்
செய்முறை
முதலில் மசாலா விழுது தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி ஒரு துண்டு, பூண்டு, தண்ணீரில் ஊறவைத்த காஷ்மீரி சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்.
அரைத்த மசாலாவில் சிறிதளவு கடலை மாவு சேர்த்து கலந்து எடுத்தால் மீன் மசாலா தயாராகிவிடும். இந்த மசாலாவை எல்லா வகையான மீன் வறுவல்களுக்கும் பயன்படுத்தலாம்.
வௌவால் மீன் வறுவல் | Pomfret Fish Fry Recipe in Tamil
அடுத்து ஒரு வௌவால் மீனை எடுத்து சுத்தம் செய்த பின்னர் மீனின் இரு புறங்களிலும் அரைத்த மசாலாவை தடவி மீனை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அப்போ தான் மசாலாக்கள் நன்கு மீனில் இறங்கி சுவையாக இருக்கும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றிய பின்பு மீனை சேர்த்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மீனை வறுக்கும் போது வாசனைக்காக சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு மீன் நன்கு வெந்து மாசாலா வாசனை நீங்கியதும் அதனி எடுத்து பரிமாறலாம். மேலே எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.