Advertisment

மீன் குழம்பு vs மீன் பொரியல்; எது சரி? வாரத்திற்கு எத்தனை நாள்கள் சாப்பிடலாம்?

அசைவ உணவு உட்கொள்ளும் பலருக்கும் மீனை பொரித்து சாப்பிடலாமா அல்லது குழம்பு வைத்து உண்ணலாமா என்ற சந்தேகம் நீண்ட நாள்களாக இருந்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fish Mess vs Fish Fry Which one is right How many days a week can you eat

மீனில் ஓமேகா 3 சத்துக்கள் உள்ளன. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

மீன்கள், கடல் மற்றும் ஏரி, குளங்களில் கிடைக்கின்றன. இந்த மீன்களை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சரிவிகிதத்தில் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஊட்டச் சத்து நிபுணர்கள் தொடர்ந்து பரிந்துரைக்கின்றனர்.

கிராமப் புறங்களில் கருவுற்ற பெண்கள், பாலூட்டும் மகளிருக்கு மீனை, தூக்கலான மசாலா சேர்த்து குழம்பு சமைத்து கொடுக்கும் வழக்கம் இன்றளவும் காணப்படுகிறது.

Advertisment

மேலும் மீனில் ஓமேகா 3 கொழுப்பு அமிலமும் காணப்படுகிறது. இந்த அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.

கடந்த காலங்களில் மீன் சுத்தமான உணவாக காணப்பட்டது. கடற்கரை மணலில் பரப்பி வைத்து விற்கப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால் தற்போது ஐஸ் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு மீன்கள் விற்கப்படுகின்றன.

சில நேரங்களில் உடலுக்கு தீங்கிழைவிக்கும் கெட்டுப் போன மீன்களும் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளன. ஆகவே மீன்களை பார்த்து வாங்குவது நல்லது.

தற்போது பலருக்கும் மீனை பொரித்து உண்ணலாமா அல்லது குழம்பு வைத்து உண்ணலாமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. பொதுவாக மீனை குழம்பு வைத்து சாப்பிடுவதே சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் கடற்கரை மீன்களை காட்டிலும் உள்ளூர் குளங்களில் உள்ள மீன்கள் சிறந்தது எனக் கூறும் ஊட்டச் சத்து நிபுணர்கள் வாரத்திற்கு இரண்டு நாள்கள் மீன் எடுத்துக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கின்றனர்.

அதேபோல் முட்டையை பருப்பு, பால் உடன் இணைந்து சாப்பிடக் கூடாது என்பதும் மருத்துவர்களின் பரிந்துரை ஆகும். மேலும் மீனை பொருத்தமட்டில் பதப்படுத்தப்பட்ட மீன்களை காட்டிலும் ப்ரெஷ் ஆன மீன்களை தேர்ந்தெடுப்பதே உத்தமம் என்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Tips Fishing
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment