மீன் வைத்து குழம்பு, வறுவல், பிரை என விதவிதமான ரெசிபி செய்யலாம். ஆனால் புதுவிதமாக வடை செய்து பாருங்க. ஆமாம் மீனில் வடை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து அடுப்பில் கடாய் வைத்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தல் உதிர்த்த மீனின் சதைகள், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் மசாலா வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக சிவக்க விட்டு எடுக்கவும். அவ்வளவு தான் ருசியான மீன் வடை தயார். தோசைக் கல்லில் போட்டு கட்லெட் போலவும் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“