நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உணவுக் கட்டுப்பாடு முக்கியமான ஒன்று. ஆனால் சில உணவுகளை நிச்சயம் சேர்துகொள்வது அவசியம். அதில் பழங்களின் முக்கியத்துவம் மிகவும் முக்கியமானது. இந்நிலையில் இந்த 5 பழங்களை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.
ஆப்பிள்
அதிக பசியைப் போக்கும். ஒரு ஆப்பிளில் 86% நீர்சத்து, 4கிராம் நார்சத்து இருக்கிறது. இந்த நார்சத்து குடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. வீக்கம் ஏற்படுவதால், இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. இதனால் எடை அதிகரிக்கிறது.
கிவி
இதில் நீர் சத்து மற்றும் நார்சத்து அதிகமாக இருக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் புரத சத்து என்சைம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் கொழுப்பை சக்தியாக மாற்றுவதோடு, உடல்பயிற்சி செய்யும்போது உங்கள் உடலுக்கு உதவுகிறது. சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பது மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
அவக்காடோ
இதில் வைட்டமின் கே, சி, இ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்து, நார்சத்து,ஃபாலேட், பொட்டாஷியம் உள்ளது. வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைப்பதுடன் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இடையின் அளவையும் குறைக்க உதவுகிறது.
நீர் பூசணி, தர்பூசணி
இதில் அதிக நீர் சத்து உள்ளது. உங்களுக்கு அதிகம் பசித்தால், நீங்கள் இதை சாப்பிடலாம். ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இதை சாப்பிடலாம். இதில் அதிக கார்போஹைட்ரேட் இருந்தாலும், உடல் எடையை அதிகரிக்காது.
கொய்யா பழம்
ஒரு கொய்யா பழத்தை சாப்பிட்டாலே, வயிறு நிரம்பிவிடும். இதில் நார்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் இருக்கிறது. அதிகமாக சாப்பிடும் பழகத்தை தடுக்கிறது. தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.