நீங்கள் உடல் எடை குறைக்கும் பயணத்தில் சரியான அளவில் டயட்டை பின்பற்றுவது அவசியமாகிறது. ஆனால் உடல் எடை குறித்தான சில பொய்களை நாம் அப்படியே நம்மிக்கொண்டிருக்கிறோம். அதை பற்றிய தொகுப்பு இது.
இதுதொடர்பாக நிக்கி சாகர் என்ற ஆரோக்கிய நிபுணர் கூறுகையில் “ சரியானதை சாப்பிவதே டயட். அதை விடுத்து தவறான புரிதல் சிக்கலுக்கு மட்டுமே வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார்.
பழங்களில் சர்க்கரை இருப்பதால் தவிப்பது.
பெரும்பாலான டயட் செய்பவர்கள், பழங்கள் இனிப்பானவை என்பதால் அதை சாப்பிடுவதை தவர்கிறார்கள். இதனால் உடல் எடை கூடத்தான் செய்யும். பழங்களில் இயற்கையான இனிப்புகள்தான் இருக்கிறது.
காலை உணவு தவிப்பது நல்லதல்ல.
இது ஒருவகையில் சரிதான். ஆனால் அதற்கு காலையில் அதிகமாக சாப்பிடுவது மிகவும் தவறு. நீங்கள் இரவில் அதிகம் சாப்பிட்டால் நிச்சம் காலை உணவை தவிக்கலாம். நேடியாக மதியம் சாப்பிடலாம். இதனால் காலை உணவை சில நாட்கள் சாப்பிடலாம் இருப்பதால் பெரிய தவறு ஒன்றும் இல்லை.
கார்போஹைட்ரேட்டுகள் முற்றிலுமாக தவிர்ப்பது
நாம் செய்யும் முக்கியமான தவறு இதுதான். கார்போஹைட்ரேட் நமது உடலுக்கு தேவை . அதிகமாக சாப்பிடக்கூடாதே தவிற. முற்றிலும் தவிர்ப்பது நல்லதல்ல..
அதிக கலோரிகளை தவிர்ப்பது
கலோரிகள் குறைவாக சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் உடலை பழக்கப்படுத்திவிட்டு இப்படி செய்தால் பிச்சனை இல்லை. ஆனால் எடுத்த எடுப்பில் சுத்தமாக குறைந்த கலோரிகளை சாப்பிடால் மயக்கம் வந்துவிடும். இது ஆரோக்கியத்தை பாதிக்கும்.