scorecardresearch

இந்த விதை கொஞ்சம், தண்ணீர்: உடல் எடை வேகமாக குறைய புதிய டிப்ஸ்  

உடல் எடை குறைய ஆளி விதை (flax seed) உதவுதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. இந்நிலையில் ஆளி விதை டீ குடித்தால் இன்னும் அதிக பலன்கள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இரவு தூங்கபோவதற்கு 1 மணி நேரம் முன்பு  குடித்தால் உடல் எடை குறைய உதவும் என்று கூறப்படுகிறது. இதுபோல மாதவிடாய் பிச்சனையான பிசிஓடி-க்கு நல்ல தீர்வாக இருக்கிறது. மேலும் பொலிவான சருமம்,முடி உதிர்தலை தவிர்க்கிறது.

ஆளி விதை டீ செய்முறை

ஆளி விதைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி குடிக்க வேண்டும்.

ஆளி விதைகளில் ஒமேகா- 3  இருக்கிறது. மேலும் இதை சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ரத்த சர்க்கரையை குறைக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Flax seed tea at night help lose weight