பாயாசங்களில் பல வகையான பாயாசங்கள் உண்டு. அதில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாயாசம் மாம்பழ பாயசம். மாம்பழம் அதிகம் விளையும் ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கடி செய்து மகிழலாம். இது மிகவும் சுவையான சத்து மிக்க பாயசம். இதன் எளிமையாக எப்படி செய்வதென பார்க்கலாம். இதுவரை செய்யவில்லை என்றால் என்ன இன்னி மாம்பழம் சீசனுக்கு ஏற்ற மாதிரி சுவையாக மாம்பழம் பாயாசம் ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மாம்பழத்தில் விட்டமின் கே, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், சர்க்கரை சத்து ஆகிய சத்துக்கள் இருக்கிறது. நம் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் மாம்பழத்தில் நிறைந்து உள்ளது. இந்த பழத்தை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரக்கூடிய பழமாக இந்த பழம் திகழ்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை சீராக வைக்க உதவுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மலக்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறது. ரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
தேவையான பொருட்கள்:
மாம்பழ விழுது - 3 கப் (250 மி.லி கப்), பால் - 1 லிட்டர், வேகவைத்த ஜவ்வரிசி - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, சேமியா - 1/2 கப், முந்திரி பருப்பு, குங்குமப்பூ, திராட்சை, நெய்.
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுக்கவும். அதே கடாயில் மேலும் சிறிது நெய் சேர்த்து அரை கப் சேமியா வறுக்கவும். ஒரு சாஸ் பானில், ஒரு லிட்டர் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து வதக்கவும். வேகவைத்த ஜவ்வரிசியை கால் கப் சேர்த்து ஒன்றாக கலக்கவும். அரை கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் கலக்கவும் மற்றும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் சில குங்குமப்பூ இழைகளை சேர்க்கவும். வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்க்கவும். அடுப்பை அணைத்து ஆறவிடவும். முழுமையாக ஆறியதும், மூன்று கப் மாம்பழக் கூழ் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கிய பிஸ்தா மற்றும் நறுக்கிய மாம்பழத் துண்டுகளால் அலங்கரிக்கவும். மாம்பழ பாயசம் நன்றாகவும் குளிர்ச்சியாகவும் பரிமாற தயாராக உள்ளது.