ஆண்மை குறைபாடு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான இயற்கை வழிமுறைகள் குறித்து ஒரு மருத்துவர் யோகவித்யா எத்னிக் ஹெல்த்கேர் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
பலர் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு வெளி மருந்துகளை நம்பிப் பழக்கப்பட்டு, அவற்றை எடுக்காமல் இயல்பான நிலையை அடைய முடிவதில்லை என்று மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய சார்புநிலையைத் தவிர்க்க, இயற்கை உணவு முறைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் நைட்ரிக் ஆக்சைடு நிறைந்த உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த உணவுகளை உட்கொள்வது விறைப்புத்தன்மை மேம்பட உதவும் என்று மருத்துவர் குறிப்பிடுகிறார். வயாகரா மருந்து முதலில் இதய செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும், பின்னர் அதன் விறைப்புத்தன்மைக்கான துணை விளைவு காரணமாக சந்தைப்படுத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
இதயத்தின் ஆரோக்கியம் விறைப்புத்தன்மைக்கு மிக முக்கியம். மருதம்பட்டை, ஓறுதல் தாமரை, வெண் தாமரை சூரணம் போன்ற இதயத்தை வலுப்படுத்தும் மூலிகை மருந்துகள் மிகுந்த நன்மை பயக்கும். படபடப்பு, கை நடுக்கம் போன்ற இதயக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதயத்தை வலுப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையை கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் வலியுறுத்துகிறார். மூலிகை மருந்துகள்:
Advertisment
Advertisements
அஸ்வகந்தா மற்றும் பூனைக்காலி போன்ற பாரம்பரிய ஆயுர்வேத மூலிகைகளையும் மருத்துவர் பரிந்துரைக்கிறார். இந்த மூலிகைகள் ஆண்மை குறைபாட்டிற்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.