நம்மில் யாருக்குத் தான் பூரி சாப்பிட பிடிக்காது. மொறுமொறுவென எண்ணெய்யில் பொரித்து எடுத்த பூரிக்கு, டேஸ்டியான உருளைக்கிழங்கு மசாலா இருந்தால், நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
Advertisment
ஆனால் வீட்டில் அடிக்கடி பூரி செய்வது கடினம். அதற்கு மாவு பிசைவது, தேய்ப்பது, பூரி பொரித்து எடுப்பது என்பது சற்று சிரமமான வேலை தான். அதைவிட பூரி பொரிக்க அதிக எண்ணெய் தேவைப்படும். ஆனால் இந்த சிம்பிள் டிப்ஸை தெரிந்துக் கொண்டால், நீங்களும் குறைவான எண்ணெய்யில் எளிதாக பூரிகளை செய்யலாம்.
நீங்கள் பூரிக்கு மாவு பிசையும் போது அதிக தண்ணீர் சேர்த்து விட்டால், இனி கூடுதலாக மாவு சேர்க்க வேண்டாம். ஒரு குக்கரில் சிறிதளவு எண்ணெய் தடவி காய்ந்ததும், தண்ணியான மாவை அதில் போட்டு சூடாக்குங்கள். எல்லாப் பக்கமும் திருப்பச் செய்து மாவில் உள்ள தண்ணீரை நீக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்து குறைவான எண்ணெய்யில் இந்த மாவை பூரியாக செய்து போட்டால் போதும், டேஸ்டியான பூரி ரெடியாகி விடும். அதற்கு கடாய் அல்லது வாணலிக்கு பதிலாக, குக்கரில் எண்ணெய் சேர்த்து, கொதித்தப் பின் பூரி பொரித்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிக எண்ணெய் தேவைப்படாது.
மேலும் குக்கர் நன்றாக சூடாகி விட்டால், வெப்பத்தை அப்படியே வைத்துக் கொள்ளும் என்பதால், நீங்கள் அடிக்கடி கேஸ் ரெகுலேட்டரை அட்ஜஸ்ட் பண்ண வேண்டி இருக்காது. அப்புறம் என்ன இந்த அருமையான டிப்ஸ்களை பயன்படுத்தி, டேஸ்டியான பூரி செய்து சாப்பிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“