பிடிகரணை கிழங்கு மூலம் எனப்படும் ஆசனவாய் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. இதன் நார்ச்சத்து மற்றும் குறிப்பிட்ட மருத்துவ குணங்கள் மூலம் நோயின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. அப்படியாக பிடிகரணை கிழங்கு குழம்பு எப்படி செய்வது என்று வீரன்வீடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பிடிகரணை கிழங்கு - 250 கிராம் சின்ன வெங்காயம் - 10-15 தக்காளி - 1 புளி - சிறிய எலுமிச்சை அளவு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப) மல்லித்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை நல்லெண்ணெய் உப்பு
செய்முறை:
Advertisment
Advertisements
பிடிகரணை கிழங்கை நன்றாக கழுவி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சிலருக்கு இந்த கிழங்கு அரிப்பை ஏற்படுத்தலாம், அதனால் கைகளை எண்ணெய தடவிக்கொண்டு வெட்டுவது நல்லது.
புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து கரைத்து புளிக்கரைசலை எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்த பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
வதங்கிய தக்காளி உடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு வெட்டிய பிடிகரணை கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு மற்றும் புளிக்கரைசலை ஊற்றி, கிழங்கு வேகும் வரை கொதிக்க விடவும்.