இதயம் ஆரோக்கியமாக இருக்க உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நமது இரத்த நாளங்களை சுத்தப்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி இதய நோய் மாரடைப்பு, பிரச்சனைகளை போக்க சாப்பிட வேண்டிய உணவு பற்றி மருத்துவர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மாரடைப்பை சரிசெய்ய என்ன மாதிரியான உணவுகளையும் மருத்துவரை கேட்டு எடுத்து கொள்ளலாம். ஆனால் மருத்துவர் மைதிலி 60 நாளில் அறுபதாம் குறுவையை சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கும் என கூறுகிறார்.
மாரடைப்பு தடுக்க Arupatham kuruvai rice அறுபதாம் குறுவை பாரம்பரிய அரிசி
அறுபது நாட்களிலேயே விளையக்கூடிய மற்றும் மிகக் குறுகிய கால பயிர் என்பது தான் அறுபதாம் குறுவை ஆகும். இதனை சாதம், இட்லி, தோசை, ஆப்பம், புட்டு மாதிரி சமைத்து அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. மாரடைப்புக்கான வாய்ப்பு குறைவு.மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட அஜீரணக் கோளாறுகளையும் தடுக்கும். குடல் பகுதி இயக்கத்தை இயக்கத்தை சீராக வைக்க அறுபதாம் குறுவை உதவும் என மருத்துவர் மைதிலி கூறுகிறார்.
அதேமாதிரி வாயுத்தொல்லையையும் போக்க கூடிய ஒன்றாகும். இதனால் நெஞ்செரிச்சல், வயிறு பகுதி எரிச்சல் ஆகியவற்றையும் இயற்கையாகவே சரி செய்யும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயையும் குறைக்கும். அதே சமயம் உடல் எடையை குறைக்கவும் இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் எலும்பு உறுதியையும் மேம்படுத்தும் இந்த அறுபதாம் குறுவை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.