அடிக்கிற வெயிலுக்கு கண்டத சாப்பிட வேண்டாம்: இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க

வெயில் காலம் தொடங்கி உள்ளது, வெறும் வயிறை நிறைக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டும் போதாது. இந்நிலையில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுளை நாம் எடுத்துக்கொண்டால், இந்த வெப்பத்தை நாம் சமாளிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
summer

வெயில் காலம் தொடங்கி உள்ளது, வெறும் வயிறை நிறைக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டும் போதாது. இந்நிலையில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுளை நாம் எடுத்துக்கொண்டால், இந்த வெப்பத்தை நாம் சமாளிக்க முடியும்.

Advertisment

வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தும், வெயில் காலத்தில், யூவி கதிர்களால் சருமம் பாதிக்கப்படும். இதனால் வெயில் காலத்தில் சிட்ரஸ் பழங்களான, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, கிரேப் ப்ரூட்ஸ் , தக்காளி, உருளைக்கிழங்கு, ஸ்டாபெரி, ப்ரக்கோலி, பப்பாளி ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

இந்நிலையில் ரத்த அழுத்தத்தை சீராக்க மெக்னீசியம் உதவுகிறது. வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை வெளிப்படும்.  மேலும் உடல் உழைப்பு அதிகமாக இருப்பதால், எலக்ட்ரோலைட் அளவு சீராக இருக்காது. இந்நிலையில் மெக்னீசியம், உடலில் உள்ள திரவ அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால் சியா விதைகள், பாதாம், கீரை வகைகள், முந்திரி, வேர்கடலை, சோயா பால், டார்க் சாக்லேட் ஆகியவற்றை நாம் சாப்பிட வேண்டும். இவற்றில் மெக்னிஷியம் அளவு அதிகம்.

சிங்க் சத்து நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. மேலும் புண்கள் குணமாக்குகிறது. கூடுதலாக பேக்ட்ரீயா,  வைரஸ் ஆகியவை நம்மை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் சிங்க் நிறைந்த உணவுகளான கார்ன் பேக்ஸ், யோகர்ட், பாதம், நட்ஸ், முழு தானியம், பூசணி விதைகள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

Advertisment
Advertisements

நமது உடலின் சதைகள், எலும்புகள் ஆகியவை புரத சத்தில் இருந்து தோன்றுகிறது. நமது உடலில் உள்ள எல்லா உயிரணுக்களுக்கும் புரத சத்து முக்கியத் தேவை. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் இந்த புரத சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கடல் வகை உணவுகள், முட்டை, பால் பொருட்கள், பருப்பு, விதைகள் மற்றும் நட்ஸ் சாப்பிட வேண்டும். இதுபோலவே தண்ணீர் அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: