கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தினால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, வியர்வை மற்றும் வியர்க்குரு, தோல் எரிச்சல் போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதினால் மன உளைச்சலை உருவாக்கிடும். மேலும் அதீத தாகம், தொண்டை வறட்சி போன்ற அசௌகரியங்களும் உண்டாகிடும்.
Advertisment
இதற்கான சரியான தீர்வு ஒன்றை டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். வெட்டிவேர், நெல்லிக்காய், நன்னாரி போன்ற மூலிகைகளை தண்ணீரில் கலந்து பருகிட வியர்வையை கட்டுப்படுத்தி , தோல் பளபளப்பாகி , உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, கண் எரிச்சல் குணமாகி, இரத்த அழுத்தம் சீராகி ஆரோக்கியத்தை அடைந்திடலாம்.
வெயில் காலம் வந்தாலே உடல் வெப்பநிலை அதிகரிக்கும் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு வந்தால் வியர்த்து உடல் எரிச்சல் சூடே உடலில் துர்நாற்றம் போன்ற உணர்வுகள் ஏற்படும் அதற்கு கோடை சூட்டில் உடலை குளிர்விக்கும் விதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.
1. வெட்டி வேர் - நல்ல வாசனை இருக்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கக்கூடியது. இந்த வெட்டிவேரை நன்கு கழுவி ஒரு சின்ன துணியில் கட்டி குடிக்கும் தண்ணீரில் போட்டுவிட்டு அந்த தண்ணீரை குடித்து வரலாம்.
Advertisment
Advertisements
2. நெல்லிகாய் - நெல்லியை சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீரில் சேர்த்து அந்த தண்ணீரையும் குடித்து வரலாம். தாகம் குறையும்.
3. நன்னாரியையும் இதே போல ஒரு துணியில் கட்டி குடிக்கும் தண்ணீரில் போட்டுவிட்டு குடிக்கலாம். கண் எரிச்சல், உள்ளங்கை பாத எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இந்த தண்ணீரை குடித்து வரலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.