தொண்டைக்கு இதமான சாதம்... இருமல், சளி இருந்தா இத சாப்பிட்டு பாருங்க!

சளி, இருமல் நேரத்தில் தொண்டைக்கு இதமளிக்கும் கூடிய மிளகு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த சாதம் சளி நேரத்தில் மட்டுமல்லாமல் ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கும் ஏற்றதாக இருக்கும்.

சளி, இருமல் நேரத்தில் தொண்டைக்கு இதமளிக்கும் கூடிய மிளகு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த சாதம் சளி நேரத்தில் மட்டுமல்லாமல் ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கும் ஏற்றதாக இருக்கும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
Garlic Pepper Rice

சளி, இருமல் தொல்லை கொடுக்கும்போது, உடலுக்கு இதமும் ஆரோக்கியமும் தரும் ஒரு உணவுதான் இந்த மிளகு சாதம். மிளகின் காரமும், அதன் மருத்துவ குணங்களும் தொண்டைக்கு இதமளித்து, சளி பிடிப்பைக் குறைக்கும். இதை சமைக்க அதிக நேரமும் தேவையில்லை. இந்த மிளகு சாதத்தை எப்படி செய்வது என்று சூப்பர்ஃபுட் மேக்கிங் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

சமைத்த சாதம் (உதிரியாக) - 1 கப்
மிளகு - 1.5 முதல் 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய்/எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
இஞ்சி (துருவியது அல்லது பொடியாக நறுக்கியது) - 1/2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

முதலில், மிளகு மற்றும் சீரகத்தை ஒரு வாணலியில் மிதமான சூட்டில் லேசாக வறுத்து, ஆறவைத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் நைஸாக அரைக்காமல், சிறிது கரகரப்பாக அரைத்தால் சுவை கூடும். ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு கறிவேப்பிலை, பெருங்காயம், மற்றும் நீங்கள் விரும்பினால் துருவிய இஞ்சி சேர்த்து லேசாக வதக்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து, அரைத்து வைத்த மிளகு-சீரகப் பொடியை சேர்த்து, ஒரு சில வினாடிகள் வதக்கவும். கவனமாக, பொடி கருகிவிடக் கூடாது. இப்போது, அடுப்பை அணைத்துவிட்டு, இதனுடன் சமைத்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறவும். பொடி சாதத்துடன் நன்கு கலந்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

அவ்வளவுதான், சுவையான மற்றும் தொண்டைக்கு இதமான மிளகு சாதம் தயார். இதைச் சூடாகச் சாப்பிடும்போது, இருமல் மற்றும் சளிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இதில் சேர்க்கப்படும் நெய் மற்றும் இஞ்சி மேலும் மருத்துவ குணங்களைச் சேர்க்கும்.

Black Pepper Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: