புற்றுநோய் என்பது உடலில் உள்ள சாதாரண செல்களில் மாற்றம் ஏற்பட்டு அசாதாரண வளர்ச்சி அடைந்து அது ஒரு நோயாக மாறுகிறது. ஒரு கட்டியாக ஆரம்பித்து அது மற்ற இடங்களில் பரவுவதே புற்றுநோய் ஆகும். இது ஒரு உயிர்கொல்லி நோயாக பார்க்கப்படுகிறது.
புற்றுநோய் வந்த பிறகு மருந்து மாத்திரைகள எடுத்து நோயை குணப்படுத்துவதை காட்டிலும் வருவதற்கு முன்பாக நம் உணவு மூலமாகவே புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்.
இதுகுறித்து நலம் 360 யூடியூப் சேனலில் விஞ்ஞானி ராமலிங்கம் கூறியிருப்பதாவது,
நம் கிச்சனில் நம் சமையலுக்கு பயன்படுத்தும் சில பொருட்கள் கூட புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்க உதவுவதாக விஞ்ஞானி ராமலிங்கம் கூறுகிறார்.
சிறுதானியங்கள்: அதிலும் குறிப்பாக குதிரைவள்ளி, கம்பு போன்ற உணவு வகைகள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.
ஆலிவ் எண்ணெய்: புற்றுநோய் செல்களை கொல்லக்கூடிய தன்மை கொண்டது.
வைட்டமின்கள்: வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் நிறைய சாப்பிடலாம்.
பழங்கள்: ஒரு நாளைக்கு 5 முதல் 6 வகையான பழங்கள் சாப்பிடலாம். குறிப்பாக ராமசீதா மற்றும் பப்பாளி பழம் முழுமையாக கேன்சல் செல்களை அழிக்கும் என்பதால் அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.
விதைகள் இருக்ககூடிய கருப்பு திரட்சைகள், உலர் திராட்சையுடன் கூடிய கருப்பு திராட்சைகள் சாப்பிடலாம். ஜூஸ்களாகவும் உலர் திராட்சைகளாகவும் சாப்பிடலாம்.
இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் வெள்ளை மிளகு எடுத்து கொள்ளலாம். கேன்சர் செல்களை உற்பத்தி செய்யும் நொதிகளை அழிக்கும். சிட்ரஸ் பலங்கள், சமைத்த கேரட் மற்றும் தக்காளி எடுத்து கொள்ளலாம்.
இந்த Foods சாப்பிட்டால் புற்றுநோய் வராது; Cancer cells-ஐ அழிக்கும்| Scientist Ramalingam | Nalam 360
அதேபோல தோலுடன் கூடிய வைட்டமின் சி பழங்கள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் சாப்பிடலாம். தினசரி உணவாக இதை எடுத்து கொள்ளலாம்.
பாதாம், கொய்யா பழம், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், சிவப்பு முள்ளங்கி, காலிஃபிளவர், பட்டன் காளான் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவுகளை வைத்தே செல்கள் வளருவது அழிவது உள்ளது என்று கூறுகிறார்.
பீன்ஸ் மற்றும் வெங்காயம் உணவுகளில் சேர்க்கலாம். தோலுடன் கூடிய வாழைப்பழங்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்குகள் எடுத்து கொள்ளலாம். வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும்.
ஒமேகா 3 எண்ணெய் கொண்ட கடல் மீன் உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். இவை மீனில் அதிகம் உள்ளதால் இதை அதிகம் சாப்பிட வேண்டும். சால்மன், கெண்டை, டியூனா மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் அதிகம் சாப்பிடலாம்.