Advertisment

இந்த உணவுகளை சாப்பிடுறீங்களா? உங்க நினைவாற்றலை காலி செய்துவிடலாம் பாஸ்

இந்த ஆய்வில் கலந்துகொண்ட நபர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டபோது, அவர்களது நினைவாற்றல் குறைந்தது.

author-image
WebDesk
Aug 05, 2022 15:40 IST
food

இந்த உணவுகளை சாப்பிடுறீங்களா? உங்க நினைவாற்றலை காலி செய்துவிடலாம் பாஸ்

சில பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால், அது உங்கள் நினைவாற்றலை பாதிக்கலாம். சமீபத்தில் வெளியான ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிப்ஸ், குளிர்பானம் , பிஸ்கட், இனிப்பு மிட்டாய்கள் இப்படியான உணவுகளில் அதிக சர்க்கரை, கொழுப்பு சத்து, உப்பு ஆகியவை நிறைந்ததாக இருக்கும்.

Advertisment

இந்த ஆய்வில் கலந்துகொண்ட நபர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டபோது, அவர்களது நினைவாற்றல் குறைந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. தினசரி இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தவர்களில் பாதிபேர், அன்றாட விஷயங்களில் பல நிகழ்வுகளை மறந்து விடுகின்றனர்.

இதற்கு மாற்றாக காய்கறி, பழங்கள், நார்சத்து மற்றும் புரத சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டவர்கள் நினைவாற்றல் அதிக நாட்கள் நீடிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. மேலும் உடல் பயிற்சியோடு உணவு முறைகளில் மாற்றம் செய்தவர்களின் நினைவாற்றல் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது. 

எனவே இனி கோக், குளிர்பானங்கள், வறுத்த சிக்கன், இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட தயிர், மிட்டாய்கள், சிப்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போது கவனமாக இருங்கள்.  

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment