முள்ளங்கி, சிகப்பு அரிசி புற்று நோயை குணப் படுத்துமா? ஆய்வு என்ன சொல்கிறது

இந்த மூன்று உணவுப் பொருட்கள் புற்று நோய்யை குறைக்க உதவலாம் என்று கூறப்படுகிறது.

இந்த மூன்று உணவுப் பொருட்கள் புற்று நோய்யை குறைக்க உதவலாம் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
முள்ளங்கி, சிகப்பு அரிசி

முள்ளங்கி, சிகப்பு அரிசி

இந்த மூன்று உணவுப் பொருட்கள் புற்று நோய்யை குறைக்க உதவலாம் என்று கூறப்படுகிறது.

Advertisment

ஆலிவ் எண்ணெய்யை தினசரி பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 30 % குறையும் என்று 45 ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக மார்பகம், வயிறு, பெருங்குடல் புற்று நோய்யை தடுக்க இது அதிகம் உதவுகிறது.

இதில் பாலிபினெல் என்ற ஆண்டி ஆக்ஸ்டண்ட் உள்ளது. இவை உடலின் செல்களை பாதிக்கக்கூடிய ஃப்ரீ ராடிகல்ஸ் என்ற மூலக் கூறிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் எல்லா வகையான ஆலிவ் எண்ணெய்களும் இதை செய்வதில்லை. குளிரூட்டபட்டு, சுத்திகரிக்கப்படும் எண்ணெயில்தான் பாலிபினெல் அதிகமாக இருக்கிறது. வெப்பத்தை பயன்படுத்தி சுத்திகரிக்கப்படும் ஆலிவ் எண்ணெய்யில் பாலிபினெல் அழிந்துவிடும். பெரும்பாலான சோதனை முடிவுகள் உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கு பொருந்தும் என்று சொல்ல முடியாது.

Advertisment
Advertisements

ரொட்டி, சிகப்பு அரிசி மற்றும் கியூனோவா போன்ற முழுதானிய உணவுகளில் அதிக நார்சத்து உள்ளது. இது செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற உதவுகிறது.

குறிப்பாக நாம் எடுத்துக்கொள்ளும் நார்சத்தின் அளவு 10 கிராமில் இருந்து 24 கிராமாக அதிகரித்தால், பெருங்குடல் புற்று நோய் குறைவதற்கு  30 % சாத்தியம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

முள்ளங்கி போல் நிலத்திற்கு கிழே விளையும் பொருட்களில் புற்று நோய்யை குறைக்கும் தன்மை உள்ளதாக கூறப்படுகிறது. முள்ளங்கி சாறு புற்று நோய் செல்கள் அழிப்பதை விரைவுப்படுத்துகின்றன. இதுவரை விலங்குகளிடம் செய்த பரிசோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ’DW தமிழ்’ யூடியூப் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Dw Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: