நாம் எல்லா விதமான சத்துகள் உணவு மூலம் எடுத்துக்கொள்வோம். இந்நிலையில் நாம் எடுத்துகொள்ளும் உணவில், குறைவாக உள்ள சத்து சிங்காக இருக்கும். மற்ற குறைபாடு ஏற்பட்டால் உடலில் காட்டிக் கொடுத்துவிடும். இந்நிலையில் சிங் குறைபாடு ஏற்பட்டால் பெரிய அறிகுறிகள் தெரியாது.
குறிப்பாக அதிக முடி உதிர்வு இருந்தால், அதற்கு சிங் சத்து குறைபாடும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். நமது கூந்தலில் உள்ள ஹார் பாலிசெல்ஸ் (hair follicles ) நமது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தோடு தொடர்புடையது. இதனால் நாம் சாப்பிடும் உணவில் ஏற்படும் மாற்றம்தான் கூந்தல் வளர்வது அல்லது உதிர்வதை நிர்ணயம் செய்கிறது.
மஷ்ரூம் அல்லது காலான்
இந்நிலையில் இதில் வைட்டமின் டி இருக்கிறது. இதில் 7 % சிங்க் இருக்கிறது. இது சிங் சத்து குறைபாட்டை குறைக்க உதவுகிறது. மஷ்ரூம் சாப்பிடுவதால், நமது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
கீரை
ஒரு கப் கீரையில் 0.16 கிராம் சிங்க் இருக்கிறது. இந்நிலையில் இரும்பு சத்தும் இதில் இருப்பதால், கூந்தலின் தன்மையை மேலும் ஊக்கப்படுத்துகிறது. மேலும் கூந்தல் வளர்வதற்கு உதவுகிறது.
பருப்பு வகைகள்
இதில் புரத சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் சிங் சத்தும் இருப்பதால், கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் சிங் சத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. குடலின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. 100 கிராம் பருப்பில், 1.5 மில்லிகிராம் சிங் இருக்கிறது.
பூசணி விதைகள்
ஒரு பெரிய ஸ்பூன் நிறைய பூசணி விதைகளில் 2 கிராம் சிங்க் இருக்கிறது. இதனால் கூந்தல் உதிர்வு சரியாகி, புதிய கூந்தல் வளரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil