வாழைப் பழம், நெல்லி... யூரிக் ஆசிட் பிரச்னை இருந்தால் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

நமது உடலில் உள்ள இயற்கையான கழுவுதான் யூரிக் ஆசிட். பொதுவாக இந்த யூரிக் ஆசிட் ரத்தத்தில் கரைந்து சிறுநீரகம் வழியாக வெளியேறும். குறிப்பாக நாம் கழிக்கும் சிறுநீரில் வெளியேறும்.

நமது உடலில் உள்ள இயற்கையான கழுவுதான் யூரிக் ஆசிட். பொதுவாக இந்த யூரிக் ஆசிட் ரத்தத்தில் கரைந்து சிறுநீரகம் வழியாக வெளியேறும். குறிப்பாக நாம் கழிக்கும் சிறுநீரில் வெளியேறும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
யூரிக் ஆசிட் பிரச்னை இருந்தால் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க

யூரிக் ஆசிட் பிரச்னை இருந்தால் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க

நமது உடலில் உள்ள இயற்கையான கழுவுதான் யூரிக் ஆசிட். பொதுவாக இந்த யூரிக் ஆசிட் ரத்தத்தில் கரைந்து சிறுநீரகம் வழியாக வெளியேறும். குறிப்பாக நாம் கழிக்கும் சிறுநீரில் வெளியேறும். இந்நிலையில் யூரிக் ஆசிட் அதிகமானால் பல்வேறு நோய்கள் ஏற்படும்.

Advertisment

சில உணவுகளை நாம் சாப்பிட்டால் யூரிக் ஆசிட் நம்மை பாதிக்காது.

வாழைப்பழம்: ப்யூரின் அளவு குறைவாக உள்ள உணவு. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டால் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

இதில் அதிக பொட்டாஷியம் உள்ளது. இவை யூரிக் ஆசிடை மட்டும் குறைக்காது. கூடுதலாக சிறுநீரகத்தின் செயல்பாடுகளையும் பார்த்துக்கொள்ளும்.

Advertisment
Advertisements

குறைந்த கொழுப்பு சத்து உள்ள பால் மற்றும் யோகர்ட்: குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பால் மற்றும் யோகர்ட் சாப்பிட்டால்  யூரிக் ஆசிட் அளவு  குறையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது நல்ல அளவில் புரத சத்து கொண்டது. குறிப்பாக இந்த புரத சத்தில் ப்யூரின் அளவு குறைவாக உள்ளது. ஆனால் சிவப்பு மாமிசத்தில் ப்யூரின் அளவு அதிகம்.  குறிப்பாக யோகர்ட்டில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது.

காப்பி: ப்யூரினை உடைக்கும் என்சைமுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் ப்யூரின் உற்பத்தியை குறைக்கும். மேலும் நமது உடல் யூரிக் ஆசிடை வெளியேற்றும் அளவை அதிகரிக்கும்.

நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி மற்றும் அன்னாசிப் பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இந்நிலையில் இவை யூரிக் ஆசிட் அளவை குறைக்க உதவும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் சி யூரிக் ஆசிட் அளவை குறைத்து, சிறுநீரகத்தில் வழியே வெளியேற்றும்.

ஓட்ஸ், செரிஸ், ஆப்பிள், பேரிக்காய், ஸ்டாபெரி, புளூபெரி, வெள்ளரிக்காய், கேரட் , பார்லி, சிலரி ஆகியவை யூரிக் ஆசிட் அளவை குறைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: