இரவு உணவு என்பது நாளின் கடைசி உணவாகும், எனவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அதை இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும், ஆயுர்வேதத்தின் படி, இரவு உணவிற்குத் தவிர்க்கப்பட வேண்டிய சில உணவுகளும் உள்ளன.
இரவு உணவு என்பது ஃபேமிலி கெட் டுகெதர்- பார்ட்டிக்கான நேரம். ஆனால் அதே வேளையில், இரவு உணவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ”என்று ஆயுர்வேத நிபுணர் ரேகா ராதாமோனி இன்ஸ்டாகிராமில் கூறினார், அவர் இரவில் சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பட்டியலிட்டார்.
கோதுமை

இரவு உணவின்போது கோதுமையை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும், இது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
தயிர்

பெரும்பாலான மக்கள் எப்போதும் தங்கள் உணவுடன் ஒரு கிண்ணம் நிறைய தயிர் வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இரவு உணவிற்கு உட்கொள்ளும்போது அது ஆரோக்கியமாக இருக்காது. “இது கபம் மற்றும் பித்தத்தை அதிகரிக்கிறது.
ரீஃபைண்ட் மாவு

கோதுமையைப் போலவே, ரீஃபைண்ட் மாவும் கனமானது மற்றும் “செரிப்பதற்கு மிகவும் கடினம்”.
இனிப்புகள், சாக்லேட்டுகள்

உங்கள் உணவை இனிப்புகளுடன் முடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நிறுத்துங்கள்! “முக்கியமாக இனிப்பு சுவை கொண்ட உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும் மற்றும் சளியை அதிகரிக்கின்றன” என்று ஆயுர்வேத நிபுணர் கூறினார்.
பச்சை சாலட்

சாலடுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் பச்சை சாலடுகள், குறிப்பாக, “வாதத்தை பன்மடங்கு அதிகரிக்கும்”. அதற்கு பதிலாக, அவற்றை சமைத்து சாப்பிடுங்கள்.
இரவு உணவிற்கு இந்த உணவுகளைத் தவிர்ப்பதற்கான காரணத்தை விளக்கிய நிபுணர், “நமது செரிமான அமைப்பு (அக்னி) இரவில் மிகக் குறைவாக வேலை செய்யும். எனவே செரிக்கப்படாத உணவு’ நச்சுகள் குவிவதற்கு வழிவகுக்கும்.
“இது அமா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது நீண்ட காலத்திற்கு எடை அதிகரிப்பு, உடல் பருமன், நீரிழிவு, தோல் நோய்கள், குடல் பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவற்றுக்கு காரணமாக அமைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“