இன்றைய சூழலில் பலருக்கும் தூங்கி எழுந்ததும் குதிகாலில் வலி இருக்கும். அந்த வலி போக நாம் எளிமையாக எடுத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய சிலவற்றை பற்றி மருத்துவர் கு. சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
Advertisment
சில பேருக்கு குதிகால் வலி இருக்கும். கால்கேனியஸ்பர் என்று சொல்வார்கள். தூங்கி எழுந்த உடனே காலை ஊன்றினால், குதிகாலில் வலி இருக்கும்.
குதிகால் வலி உள்ளவர்கள் எடுத்து கொள்ள கூடாத உணவு பற்றி டாக்டர் சிவராமன் கூறுகிறார். அதாவது புளிப்பு மற்றும் குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். மென்மையான குஷன் இருக்கும் செருப்பு வாங்கி அணிய வேண்டும்.
தூங்கி எழுந்து கொஞ்ச தூரம் நடக்கும்போது, வலி ரொம்ப இருக்கிறது என்று சொல்வார்கள். அப்புறம், கொஞ்ச நேரம் ஆன பிறகு வலி குறையும். அப்புறம் பழையபடி மாலையில் வலிக்கத் தொடங்கிவிடும். ஒரு சின்ன முள்ளு மாதிரி உருவாகி அது போய் கீழ் இருக்கிற சதைப் பகுதியைக் குத்திக்கொண்டே இருக்கும். இந்த குதிகால் வாதத்திற்கு செவ்வாழைப் பழம் ஒரு அருமருந்து.
Advertisment
Advertisements
குதிகால் எலும்பினுடைய முள் குத்தி குதிகாலினுடைய சதைகள் புண்ணாகி போயிருக்கும். அதை மாற்றக்கூடிய உணவுப் பொருளாக செவ்வாழைப் பழம் இருக்கிறது.
உங்களுக்கு குதிகால் வலி இருக்கிறதா, அப்படியென்றால் மறக்காமல் செவ்வாழைப் பழம் சாப்பிடுங்கள், குதிகால் வலியில் இருந்து விடுதலை பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.