ஹார்மோன் பிரச்சனையா; அப்போ இந்த உணவுகளை எல்லாம் கட்டாயம் சேருங்கள் - டாக்டர் ஜெயரூபா

ஹார்மோன் பிரச்சனையாக இருக்கிறதா அப்போ நீங்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.

ஹார்மோன் பிரச்சனையாக இருக்கிறதா அப்போ நீங்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
hormones

இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் அனுபவிக்கும் பல உடல் மற்றும் மன அழுத்தங்களின் பின்னணியில் ஹார்மோன்கள் சமநிலை இல்லாமை என்பது முக்கிய காரணமாக உள்ளது. நம்முடைய ஹார்மோன்கள், இனிப்பு ஆசை, பீரியட்ஸ் வலி, தோல் பிரச்சனைகள், முடி உதிர்வு, எடை அதிகரிப்பு இவை அனைத்தும், ஒரே அடிப்படையில் துவங்கும் என டாக்டர் ஜெயரூபா கூறுகிறார். 

Advertisment

ஹார்மோன்கள் சமநிலையை சீராக்க உதவும் ஆறு முக்கிய நட்ஸ் வகைகள் குறித்தும், அவை எப்படி நம் ஹார்மோன்கள் சமநிலையை சீராக்க, இன்ஃப்ளமேஷனை குறைக்க, முடி வளர்ச்சி, நிம்மதியான தூக்கம் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் ஆகியவற்றுக்கு தீர்வாக விளங்குகின்றன என்பதையும் விரிவாக காணலாம்.

பயனுள்ள நட்ஸ் வகைகள் மற்றும் சத்துக்கள்:

1. பாதாம் 
வைட்டமின் E, மெக்னீசியம், கால்சியம் நிறைந்தது. PMS அறிகுறிகள், தசை வலி, போன்றவற்றை குறைக்கும்.
வெறும் வயிற்றில் 4-5 பாதாம் (ஊறவைத்து) எடுத்தால் சிறந்த பலன்.
 2. ஆளிவிதைகள் 
ஒமேகா-3 கொழுப்பு அமிலம், எஸ்ட்ரஜன் நிறைந்தது. ஹார்மோன்கள் சமநிலைக்கு, கொழுப்பு குறைக்க, தைராய்டு, PCOS, பீரியடரஸ் ரெகுலர் பண்ண உதவும். தயிர், சாலட், சட்னியில் 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கலாம்.
 3. பூசணி விதைகள் 
ஜிங்க், மெக்னீசியம் சத்து அதிகம். கிரேவிங், தூக்கமின்மை, தசை வலி குறைக்க உதவுகிறது.
காலை 11 மணிக்கு smoothie-யில் அல்லது வெறும் விதையாக 1 டேபிள் ஸ்பூன்.
 4. சூரியகாந்தி விதைகள் 
வைட்டமின் E, செலினியம் சத்து கொண்டது.
தைராய்டு சீராக்க, தோல், முடி வளர்ச்சிக்கு உதவும்.
மாலை நேரத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
 5. வால்நட்ஸ் 
ஆன்டி-இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்டது.
PCOS, சர்க்கரை ஆசை, ஹார்மோன்கள் கோளாறுகள் குறைக்க உதவும்.

தினசரி தகுந்த அளவில் இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம்.

Advertisment
Advertisements
  1. ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும்
  2. மாதவிடாய் முறையாக வரும்
  3. உடல் எடை சீராகும்
  4. தோல், முடி ஆரோக்கியம் பெறும்
  5. இன்ஃப்ளமேஷன் குறையும்
  6. PMS மற்றும் period வலி குறையும்

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

hormones Bad effects of hormone imbalance

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: