ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் பல நோய்களை தடுக்க முடியும். ஒவ்வொரு நபரும் உடல் எடை பார்ப்பது போல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரிபார்ப்பது முக்கியமானது. குறிப்பாக 55% பெண்களுக்கு ரத்த சோகை இருப்பதாக ஆய்வு கூறுவதாக மருத்துவர் நித்யா கூறுகிறார்.
எனவே உடலில் ரத்தத்தை அதிகரிக்க ஒரு எளிய வழிமுறை பற்றி சித்தா டாக்டர் நித்யா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
ரத்த சோகை அதாவது இருப்பு சத்து குறைவாக இருந்தால் பல நோய் பாதிப்புகள் ஏற்படும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இயல்பாகவே உடலில் இருந்து ரத்தத்தை இழக்கிறார்கள். அப்போது இரும்புத் சத்து குறையும்.
அதனால் குழந்தை பருவத்தில் இருந்தே பெண்களே அதிக இரும்பு சத்து உள்ள உணவு சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு 13-14 யூனிட் ரத்தம் உடலில் இருக்க வேண்டும். பெண்களுக்கு 12-13 யூனிட் ரத்தம் இருக்க வேண்டும்.
இரும்பு சத்திற்கு தனியாக மாத்திரை வேண்டாம், நாம் சாப்பிடும் உணவிலேயே எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். இரும்புச்சத்து உடலில் அதிகரிக்க ஒரு எளிய உணவு முறையை பார்க்கலாம்.
அதற்கு முதலில் தேவையான அளவு கருவேப்பிலை எடுத்து நிழலில் உலர்த்தி கருவேப்பிலையை பொடி செய்து அதில் தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் அதிகரிக்கும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியது அவசியம்.
அதேபோல இரத்த அளவு குறையாமலும் பார்த்துக் கொள்ளும். மேலும் கல்லீரலில் உள்ள கெட்டதை வெளியேற்றவும் உதவும்.
உணவுமுறை இப்படி இருக்கட்டும நீண்ட நாள் வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்
அதுமட்டுமின்றி கருவேப்பிலை சாப்பிட்டு வருவதால் கண் பார்வை தெளிவாகும். முடி வளர்ச்சிக்கு உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.