கண் பார்வையை அதிகரிக்க கிலோ கணக்கில் கேரட் வாங்கி சாப்பிடுகிறீர்களா? ஆனால் கேரட்டை விட வைட்டமின் ஏ அதிகம் உள்ள சத்து பற்றி தெரியுமா? டாக்டர் சுகண்யா காவேரி ஹாஸ்பிட்டல் யூடியூப் பக்கத்தில் இதுகுறித்து தெளிவாக விளக்குகிறார்.
கேரட் மற்றும் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. ஆனால் இவற்றை கிலோ கணக்கில் சாப்பிட்டாலும் கண்பார்வை தெளிவாகி கண்ணாடி கழற்ற முடியாது என்கிறார் மருத்துவர். இவை இரவு பார்வையை மேம்படுத்தும். அதேபோல கண்ணாடி கழற்ற முடியாது ஆனால் பார்வையை தக்க வைத்து கொள்ளலாம்.
Does Carrot Improve Eyesight? | கேரட் - கண் பார்வை அதிகரிக்குமா? | maa kauvery Trichy | Tamil
கேரட்டை விட அதிக வைட்டமின் ஏ சத்து சர்க்கரைவள்ளிகிழங்கில் உள்ளது. அதற்காக இந்த கிழங்கு நிறைய சாப்பிட்டாலும் பார்வை மேம்படாது. பார்வை மேலும் மோசமடையாமல் பாதுகாக்கும். அதேமாதிரி இவற்றில் உள்ள மற்ற சத்துக்கள் நமக்கு பலன் தரும்.
அதேமாதிரி தான் கண் பார்வையை தெளிவாக்க எந்த உணவுகள் சாப்பிட்டாலும் கண்பார்வை சரியாகாது என்கிறார் மருத்துவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.