scorecardresearch

குறையவே குறையாத வயிற்றுப் பகுதி சதை: இதை மட்டும் கைவிட்டால் போதும்

இதனால் கார்போஹைட்ரேட் எடுத்துகொள்ளும் அளவை 40 % குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதை 40 வயதிற்குள் செய்ய வேண்டும்.

belly fat

உடல் எடை குறைப்பது என்பது ஒரு சவாலான விஷயம்தான் . அப்படி நாம் உடல் எடை குறைத்தாலும், வயிற்றுப் பகுதி சதையை குறைக்க நாம் அதிகம் உழைக்க வேண்டும். இந்நிலையில் வயிற்று பகுதியில் உள்ள, சதையால் தான் சர்க்கரை நோய், இதய நோய் ஏற்படுகிறது.

இந்நிலையில் சில விஷயங்களை நாம் தொடர்ந்து பின்பற்றினால், உடல் எடை குறையும். இதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

நார்சத்து நிறைந்த உணவுகள்

நார்சத்து நிறைந்த உணவுகளை நாம் அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் ஜீரணிக்கும் தன்மை அதிகமாகும். ஓட்ஸ், முழு கோதுமை, சோளம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்

இந்த சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், நமது ஹார்மோன்களை தடுத்து உடல் எடை குறைவதை கடினமாக்குகிறது. இதனால், கேக்ஸ், பீட்சா, வெள்ளை பிரட், வெள்ளை அரிசி ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

வயது அதிகரிக்க, நமது உடல்  கார்போஹைட்ரேட்டை கரைத்து சக்தியாக மாற்றும் ஆற்றல் குறையும். இதனால் கார்போஹைட்ரேட் எடுத்துகொள்ளும் அளவை 40 % குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதை 40 வயதிற்குள் செய்ய வேண்டும்.

இந்நிலையில் 3 வேளை சாப்பிடுவதை கைவிட வேண்டும். சிறிய அளவு உணவை, 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடவும். இதனால் உடல் எடை குறையும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Foods to reduce belly fat