scorecardresearch

தேவையில்லாத ஊளச்சதையை குறைக்க இந்த 4 உணவுகள் ரொம்பவே முக்கியம்

இந்நிலையில் நீங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியும், உங்கள் தேவையில்லாத சதை குறையவில்லையா? அப்போ இந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

food

இந்நிலையில் நீங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியும், உங்கள் தேவையில்லாத சதை குறையவில்லையா? அப்போ இந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

உடலில் தேவையான நேரத்தில் தண்ணீர் பருகாததால், ஏற்கனவே இருக்கும் தண்ணீரை உடல் வரட்சியடையாமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் இதை சீராக்க உதவும் உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குருதிநெல்லி

இதில் நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் சி ஆகியவை இருக்கிறது. இது உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது. மேலும் இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது.

வெள்ளரிக்காய்

இதில் அதிக தண்ணீர் சத்து இருக்கிறது. இந்நிலையில் இது உடல் நீரின்றி வரட்சியடைவதை தடுக்கிறது. இதில் இருக்கும் காஃபிக் ஆசிட் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தர்பூசணி

வெயில்காலத்திற்கு தேவையான ஒரு பழம் 92 % தண்ணீர் சத்து கொண்டது. இந்நிலையில் இதில் இருக்கும் நார்சத்து மற்றும் முக்கிய சத்துக்கள் உடல் எடை குறையும்போது தேவைப்படும் சத்தை மீண்டும் தருகிறது.

எலுமிச்சை

நாம் குடிக்கும் சில பானங்களில் எலுசமிச்சை சேர்த்து குடித்தால், கொழுப்பை கரைக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Foods to reduce extra fat and be fit