திணை என்பது சிறுதானிய பயிர் வகைகளில் முக்கியமான ஒன்றாகும். திணை அரிசி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகளும், அதுமட்டுமல்லால் எது மாதிரியான நோய்களையும் சரி செய்கிறது என்று மருத்துவர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
தினை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
கொலஸ்ட்ரால்: உடலில் உள்ள கொட்ட கொழுப்புகளை குறைக்க உதவும். இதில் உள்ல 2 முக்கிய வேதிப்பொருட்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் சேரமால் தடுக்கும். எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் திணை அரிசியில் பொங்கல், தோசை போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
நீரிழிவு: அரிசி உணவுகள் அதிகம் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சர்க்கரை சத்து அதிகம் உள்ள அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்கள் தினை உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
8 முக்கிய நோய் தடுக்கும் நம் பாரம்பரிய திணை அரிசி/ Foxtail millet in tamil/ Dr.Mythili
இதய ஆரோக்கியம்: திணை அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
எலும்பு ஆரோக்கியம்: திணை அரிசியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான தாதுக்கள் உள்ளன.எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைய தினமும் கால்சியம் சத்து நிறைந்த தினை அரிசி உணவுகளை சாப்பிட்டு வரலாம்.
இரும்பு சத்து: இரும்பு சத்து அதிகரிக்க, சைகளை வலுவாக்க உதவும். இரும்பு சத்து குறைபாடை சரிசெய்து அதனால் வரும் பிரச்சனைகளை சரிசெய்யும். தலை முடி உதிர்வு கட்டுப்படுத்தி சோம்பலை போக்கும்.
எடை மேலாண்மை: அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட திணை அரிசி எடை மேலாண்மைக்கு உதவும். எடையை குறைக்க காலை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.
நரம்பு தளர்ச்சி: வைட்டமின் பி1 சத்து உள்ளது. பக்கவாதம் ஏற்படாமல் தடுக்க உதவும்.
வயிறு கோளாறு: அதிகம் நார்ச்சத்து உள்ளதால் சிறுதானியங்கள் அதிகம் சேர்க்கும்போது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். செரிமான கோளாறுகளை போக்கும். அதுமட்டுமின்றி வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இந்த தகவல்கள் மருத்துவர் மைதிலியின் யூடியூப் பக்கமான Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.