scorecardresearch

மாரடைப்பு,  இதய நோய் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கணுமா ? இதை கட்டாயம் பண்ணித்தான் ஆகனும்   

கார்போஹைட்ரேட் சாப்பிடுவதால் மட்டும் இதய நோய் ஏற்படுவதில்லை ,பதப்படுத்தப்பட்ட உணவில் இருக்கும் சர்க்கரைதான் இதய நோய்க்கு அதிக காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மாரடைப்பு,  இதய நோய் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கணுமா ? இதை கட்டாயம் பண்ணித்தான் ஆகனும்   

கார்போஹைட்ரேட் சாப்பிடுவதால் மட்டும் இதய நோய் ஏற்படுவதில்லை ,பதப்படுத்தப்பட்ட உணவில் இருக்கும் சர்க்கரைதான் இதய நோய்க்கு அதிக காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இதனால் உடல் பருமன், பக்கவாதம் ஆகியவையும் ஏற்படலாம்.  இது தொடர்பாக இதய நிபுணர்  அட்டூல் மத்தூர் மருத்துவர் கூறுகையில் “ நன்றாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, ஆக்ஸிடேடிவ் மெட்டபாலிசம் (oxidative metabolism ) நடைபெறும்போது, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

ஃபிரீ  சுகர் என்று கூறப்படும் பொருள், உணவை பதப்படுத்தும்போது சேர்க்கப்படுகிறது.

எந்த விதமான பதப்படுத்த உணவில் இந்த ஃபிரீ  சுகர் இருக்கும் ?

பேக் செய்யப்பட்ட பிரட், சிப்ஸ், சாக்லேட், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உனடியாக தயாராகும் உணவுகள், சோடா, குளிர்பானங்கள்,

இந்த உணவில் செயற்கையான சர்க்கரை இருக்கும். மேலும் இதில் அதிக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்  இருக்கும்.  நார்சத்து உள்ளிட்ட சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும். இதில் டிரான்ஸ் கொழுப்பு சத்து இருக்கிறது. இந்த கொழுப்பு சத்து உடல் எடையை அதிகரிக்கிறது. இதனால் உடல் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இதனால் டைப் 2 சர்க்கரை நோய், இதய நோய் ஏற்படும்.

ஒரு நாளில் எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்?

ஒரு நாளைக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளில் 10 % குறைவாக சர்க்கரையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதிகமான உடல் பயிற்சி செய்தால் அதிக சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடது.

உங்களுக்கு பசி எடுத்தால்  டிரை புரூட்ஸ் மற்றும் ஒரு அவித்த முட்டை ஆகியவற்றை நீங்கள் சாப்பிடலாம். இயற்கையாக  சில பொருட்களில் இனிப்பு இருக்கும், அதை நீங்கள் சாப்பிடலாம், 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Free or added sugars up heart disease risk