அத்திப்பழத்தின் நன்மைகள் குறித்து நமக்கு அதிகம் தெரிந்திருக்கும். இந்நிலையில் அத்திபழங்களை பச்சையாக அல்லது உலர் பழமாக சாப்பிடலாமா? என்ற கேள்வி எழுகிறது.
இநிந்லையில் அத்திப்பழத்தில் நார்சத்து இருக்கிறது. இது ஜீரணிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. நாம் வெளியேற்றும் மலத்தை மிரதுவாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் குறைகிறது. நமது குடலில் வாழும் நல்ல பேக்டீரியாவிற்கு உணவாக இருக்கிறது.
வயிறு தொடர்பாக தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படும் இதை ஐ.பி.எஸ் என்று அழைக்கிறோம். இதில் இருக்கும் கரைக்கூடிய நார்சத்து ஐ.பி.எஸ் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.
ஆக்ஸிடேட்டிவ் ஸ்டெஸ் எனப்படும் பாதிப்பை குறைப்பதால், ரத்த சர்க்கரை அளவையும் இது கட்டுப்படுத்தும். மேலும் இதில் ஆப்சிசிக் ஆசிட், மாலிக் ஆசிட், க்ளோரோ ஜெனிக் ஆசிட் ஆகியவை உள்ளது. இவை உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்தும்.
மேலும் இதில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், எலும்பு வளர்வதற்கு உதவும். மேலும் மீண்டும் எலும்பு வளர நமது உடலை தூண்டும்.
பொட்டாசியம் இதில் இருப்பதால், ரத்த அழுத்தத்தை குறைக்கும். சோடியத்தால் ஏற்படும் தீமைகளை இது குணமாக்கும். இதில் இருக்கும் பொட்டாஷியம் சதைகளின் செயல்பாடு, நரம்புகளின் செயல்பாடு, உடலில் உள்ள தண்ணீர் அளவு மற்றும் எலக்ட்ரோலைட் அளவை சீராக வைக்க உதவுகிறது.
மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் ஏ, ஆண்டி ஆக்ஸிடண்ட் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கும். புதிய தோல் வளர உதவும்.
பச்சையாக கிடைக்கும் அத்தி பழத்தில் குறைந்த கலோரிகள் இருக்கிறது. இதுவே உலர்ந்த பழத்தில் இனிப்பு இருப்பதால் பச்சையான பழத்தை சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“