நாம் வீட்டில் வைக்கும் சாதம் மிஞ்சி விட்டால் என்ன செய்வது என்று யோசிப்போம். இந்நிலையில் இதை வைத்து நாம் பிரைடு ரைஸ் செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
மிஞ்சிய சாதம்
மிளகாய் போடி,
உப்பு
பெப்பர் பொடி
சோயா சாஸ்
சில்லி சாஸ்
டொமாட்டோ சாஸ்
காய்கறி அல்லது முட்டை
எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மிஞ்சிய சாதம் போட வேண்டும். தொடர்ந்து அதில் மிளகாய்த் தூள், பெப்பர் தூள், 3 வகையான சாஸ்போட வேண்டும். சோயா சாஸ் அதிகமாக பயன்படுத்த கூடாது. அப்படி செய்தால் புளிப்புச்சுவையாக மாறிவிடும்.. தற்பொது இத்துடன் காய்கறி அல்லது முட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக தீ மற்றும் மிதமான தீயில் மாற்றி மாற்றி சமைக்க வேண்டும். இப்போது சுவையான பிரைட் ரைஸ் ரெடி.