சில நேரங்களில், என்ன சமைப்பது என்று தெரியாமல், சுவையான ஒன்றைச் சாப்பிடத் தோன்றும். அப்படிப்பட்ட சமயங்களில், சமைக்கத் தெரியாதவர்கள் கூட எளிதில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான உணவுதான் இந்த வறுத்தக்கார முட்டை தொக்கு. பேச்சுலர்கள் மற்றும் புதிதாக சமைப்பவர்கள் செய்ய ஒரு ஈஸியான ரெஸிபி ஏபிகிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
முட்டை எண்ணெய் உப்பு மிளகுத்தூள் கடுகு கறிவேப்பிலை சோம்பு வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது தக்காளி மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் அடுப்பை ஆன் செய்து, ஒரு தவாவை வைத்து, சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும். இதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, மேலே சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி, இரண்டு பக்கமும் நன்கு வேகும்படி சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை, சோம்பு போட்டு நன்கு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர், மீடியம் சைஸ் தக்காளி ஒன்றைச் சேர்த்து நன்கு வதக்கி விடவும். காரத்திற்கு ஒரு டீஸ்பூன் மிளகாய்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, மற்றும் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு வதக்க வேண்டும்.
மூடி போட்டு இரண்டு நிமிடம் போல சமைக்கவும். மசாலா நன்கு வெந்ததும், நாம் வறுத்து வைத்திருந்த முட்டைகளைச் சேர்க்கவும். முட்டையின் மேல் மசாலா நன்கு படும்படி தடவி, மீண்டும் இரண்டு நிமிடம் மூடி போட்டு சமைத்து எடுத்தால், ஒரு டேஸ்டியான வறுத்தக்கார முட்டை தொக்கு ரெடி.