scorecardresearch

மட்சா டீ: சுகர், கொழுப்பு குறைக்க விரும்புறவங்க இதை செக் பண்ணுங்க!

மட்சா என்பது காமிலியா செனிசிஸ் (Camellia sinensis) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. க்ரீன் டீயை விட இதில் அதிக காஃபைன் இருக்கிறது. இதில் தியனின், க்ரோலோபில், பாலிபினால்ஸ், அமினோ ஆசிட், அமினோ ஆசிட், ஆகியவை இருக்கிறது. இந்த சத்துக்கள் இருப்பதால், ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்திற்கு எதிராக செயலாற்றும்.

மட்சா டீ: சுகர், கொழுப்பு குறைக்க விரும்புறவங்க இதை செக் பண்ணுங்க!

மட்சா என்பது க்ரீன் டீ இலைகளை பதப்படுத்தி செய்யும் ஒரு பொருள்.  குறிப்பாக டீ மற்றும் காப்பி விரும்பிகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.

மட்சா என்பது  காமிலியா செனிசிஸ் (Camellia sinensis) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. க்ரீன் டீயை விட இதில் அதிக காஃபைன்  இருக்கிறது. இதில் தியனின், க்ரோலோபில்,  பாலிபினால்ஸ்,  அமினோ ஆசிட், அமினோ ஆசிட்,  ஆகியவை இருக்கிறது. இந்த சத்துக்கள் இருப்பதால், ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்திற்கு எதிராக செயலாற்றும்.

ஆரோக்கியமாக குடலுக்கு காரணமான பாலிபினால்ஸ் கொண்டது. இவை நல்ல பேக்டிரீயாவை உருவாக்குகிறது. வீக்கத்தை குறைக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.

இதனால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் இருக்கும் பிபாப்போனாய்ட்ஸ் இதய ரத்த கூழாய்களில் காப்பற்றும். மேலும் இந்த ரத்த குழாய்களை வலுவாக்கும்.

இதில் காஃபைன் இருப்பதால், பதற்றம் குறையும். இதில் இருக்கும் அதிகபடியான காஃபைன் உடலை பாதிக்காது.

இது ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் இ.ஜி.சி.ஜி அளவு  குளுக்கோஸ் உடனடியாக நமது ஜீரணக் மண்டலத்தில் கலப்பதை தடுக்கிறது. இதனால் இன்சுலின் செயல்பாடு மற்றும் உடல் இன்சுலினை ஏற்றுக்கொள்ள உதவுகிறது.

இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் இ.ஜி.சி.ஜி பேட்டி ஆசிடை உடைக்க உதவுகிறது. மேலும் கொழுப்பை அதிகமாக உடல் எடுத்துக்கொள்ளாமல் தடுக்கிறது. இதனால் உடல் எடை குறையும். அதுபோல சீரான எடையில் நீடிக்க உதவும்.

மேலும் இதில் இருக்கும் ஒருவகை சத்து  சீபம் அல்லது எண்ணெய் சுரப்பதை குறைக்கிறது. இதனால் அதிக எண்ணெய் சுரக்காது. மேலும் இது இருக்கும் வீக்கத்தை குறைக்கும் தன்மை சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. வேண்டும் என்றால் நேரடியாகவே மட்சாவை சருமத்தில் பயன்படுத்தலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: From aiding fat loss to regulating blood sugar the many reasons you may want to try matcha