இந்த பழத்துல இவ்ளோ பயன்களா ? கண் ஆரோக்கியம் முதல் சர்க்கரை நோய் கட்டுப்பாடு வரை பல மருத்துவ பயன்கள் இருக்கு

கோஜி பெரீஸ் பற்றி பெரிதாக நமக்கு தெரிந்திருக்காது. இந்நிலையில் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் அதிக மருத்துவ நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கோஜி பெரீஸ் பற்றி பெரிதாக நமக்கு தெரிந்திருக்காது. இந்நிலையில் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் அதிக மருத்துவ நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
கோஜி பெரீஸ்

கோஜி பெரீஸ்

கோஜி பெரீஸ் பற்றி பெரிதாக நமக்கு தெரிந்திருக்காது. இந்நிலையில் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் அதிக மருத்துவ நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளதால், இது வயதாவதை தடுக்கும். டைப் 2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். கண் ஆரோக்கியத்திற்கு உதவி செய்து, வயதாவதால் ஏற்படும் பார்வை தெளிவின்மையை கட்டுப்படுத்தும்.

கோஜி பெரிஸ் வயதாவதை தடுக்கும் குணம் கொண்டது. இதில் உள்ள பீட்டெயின், சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். சூரியக் கதிர்களால் சேதமாகும் கொலஜனை, சேதத்திலிருந்து காப்பாற்றும்.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் அழகு சாதனப் பொருட்களில் முக்கியமாக இடம் பெருகிறது. இவை சருமத்தின் எரிச்சலை, விக்கத்தை, சூரியக் கதிர்களால்  ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது.

Advertisment
Advertisements

கண் ஆரோக்கியம்: இதில் சியாக்சாந்தின் என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதுவரை நடைபெற்ற ஆய்வை பொறுத்தவரை கோஜி பெரிஸை நாம் சாப்பிட்டால், இது சியாக்சாந்தின் அளவை அதிகரித்து 26 % வயதாவதால் ஏற்படும் தெளிவற்ற பார்வை சிக்கல் ஏற்படுத்தாது. மேலும் கண் புரை நோய் ஏற்படாது.

இந்நிலையில் இதில் உள்ள சியாக்சாந்தின்  கண்ணின் ரெட்டினாவை, சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.

நீளமான கார்போஹைட்ரேட் கொண்டது, இதை பாலிசாச்சரைட்ஸ் என்று அழைப்பார்கள். இவை, ரத்த சர்க்கரை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் வலுவாக சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்நிலையில் இதில் வைட்டமின் சி, ஏ, இரும்புசத்து, நார்சத்து உள்ளது. இதனால் தேவையான சத்து உடலுக்கு கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.  

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: