மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இதனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான உணவுகளை பற்றி மருத்துவர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கால்சியம் நிறைந்த உணவுகள் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதற்கு கேழ்வரகு, பிரண்டை துவையல் அதிகம் எடுத்து கொள்ளலாம். அதேபோல பால், சீஸ் உள்ளிட்ட உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். தசைகளை வளர்க்கவும், நரம்புகளின் செயல்பாடுகளை செய்யவும் உதவும். சீராக ரத்த அழுத்தத்தை வைத்துகொள்ளவும், ஹார்மோன்கள் அளவு சீராகவும் இருக்க உதவுகிறது.
50 வயதில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் | Dr.Sivaraman - Women Menopause healthy foods
அதேமாதிரி மெனோபாஸ் நேரத்தில் பதட்டம், பயம் இருக்கும். அதற்கு மாதுளம் பழம் தினமும் சாப்பிடலாம். புரத சத்து நிறைந்த உணவுகளான டோப்பூ, பிளாக்ஸ் விதைகள், கொண்டைக்கடலை சாப்பிட்டால் ஈஸ்டோஜென் அளவை அதிகமாக்க உதவும்.
எலும்புகளை உருவாக்கும் செல்களை இவை உருவாக்குகிறது. இந்நிலையில் முன்கை எலும்பு முறிவை இது தடுக்கும். மேலும் இடுப்பு மற்றும் தண்டுவடத்தில் ஆரோக்கியமான எலும்புகளின் அடர்த்தி இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.