இதயம் ஆரோக்கியமாக இருக்க உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நமது இரத்த நாளங்களை சுத்தப்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி இதய நோய் மாரடைப்பு, பிரச்சனைகளை போக்க சாப்பிட வேண்டிய ஐந்து பழங்கள் குறித்து பார்ப்போம்.
மாதுளை: மாதுளம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
பெர்ரி: ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் பல வகைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இரத்த நாளங்களில் பிளாக் ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே அதிகம் எடுத்து கொள்ள முடியவில்லை என்றாலும் எப்போதாவது சாப்பிடலாம்.
ஆரஞ்சு: ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழ வகைகளை சாப்பிடலாம். இது வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை இதயத்திற்கு இரத்தத்தை அளிக்கும் தமனியில் பிளேக் படியாமல் தடுக்கின்றன. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை படிப்படியாக குறைக்க உதவுகின்றன.
கிவி: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கிவி பழத்தில் நிறைய பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது இரத்த அழுத்த அளவுகளை குறைத்து, அவற்றை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
நெல்லிக்காய்: இந்த நெல்லிக்கனியை அடிக்கடி சாப்பிடும் போது அதில் உள்ள புளிப்பு தன்மை மற்றும் ரசாயனங்கள் இதயத்தில் ரத்தம் ஊறுதல் அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் இந்த நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியம் சத்து ஆதிராஸ்கிலோ ரேசிஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் வராமல் தடுக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“