சர்க்கரை-இனிப்பு பானங்கள் குடிப்பது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் ஏற்படவும் இறப்பு நேரும் அளவுக்கு அதிக ஆபத்துடன் தொடர்புள்ளது என்று நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல் தெரிக்கின்றனர். மேலும், தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
ஆய்வின்படி, நீரிழிவு நோய் இருப்பது கண்டறிந்த பிறகு, காபி, டீ அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் அருந்துவது அதிகரித்தால் (நுகர்வில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும்) இதய நோய்கள் மற்றும் இறப்பு நிகழ்வு மேலும், குறைகிறது என்று தெரியவந்துள்ளது.
சர்க்கரை - இனிப்பு கலந்த மென் பானங்களை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோயை உருவாக்கி, மரணத்தை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் என்று பி.எம்.ஜே (BMJ) ஆய்விதழில் வெளியிடப்பட்ட நீண்ட கால ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மறுபுறம், காபி, டீ அல்லது வெற்று நீர் அருந்துவது இதய நோய் மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் இந்த ஆய்வை விளக்கி ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், இந்த ஆராய்ச்சியின் கூடுதல் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துள்ளார். “முழு கொழுப்பு பால் நுகர்வு இருதய நோய்கள் (CVDs) மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் (T2D) உள்ளவர்களில் இறப்புக்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையதாக உள்ளது. மறுபுறம், குறைந்த கொழுப்புள்ள பால் நுகர்வு, இதய நோய்கள் மற்றும் இறப்பு அபாயத்தை குறைத்துள்ளது” என்று அவர் எழுதியுள்ளார்.
இந்த ஆய்வின் படி, காபி, டீ அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் நுகர்வு அதிகரிப்பு (நுகர்வில் எந்த மாற்றமும் இல்லை) நீரிழிவு நோயைக் கண்டறிவதன் விளைவாக இருதய நோய்கள் மற்றும் இறப்பு நிகழ்வுகள் மேலும் குறைந்துள்ளது.
காபி, தேநீர், தண்ணீர், குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது செயற்கை இனிப்பு பானங்கள் ஆகியவற்றுடன் ஒரு நாளைக்கு ஒரு முறை குடித்தால், சர்க்கரை-இனிப்பு பானங்களை (SSBs) குடிப்பது 18, 16, 16, 12 மற்றும் 8 சதவிகிதம் இறப்பில் குறைவான ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய்கள் தொடர்புடையவர்களின் புள்ளிவிவரங்கள் முறையே 20, 24, 20, 19 மற்றும் 15 சதவீதம் ஆபத்து உள்ளதாகக் காட்டுகிறது.
இந்த ஆய்வைப் பற்றிப் பேசுகையில், கும்பல்லா ஹில் மருத்துவமனையின் சைஃபி மருத்துவமனையின் மூத்த தலையீட்டு இருதயநோய் நிபுணர் டாக்டர் கவுஷல் சத்ரபதி, எளிய சர்க்கரைகள்' என்று அழைக்கப்படும் சர்க்கரை-இனிப்பு பானங்கள் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன என்று கூறினார். "இந்த இன்சுலின் திடீர் அதிகரிப்பை குறுகிய காலத்திலும் மற்றும் நீண்ட காலத்திலும் என இரண்டிலுமே தீங்கு விளைவிக்கும். மீண்டும் மீண்டும் அதிக அளவு இன்சுலின் விளைவிப்பது உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய் போன்றவற்றின் அதிகரிப்புக்கு காரணமாகிறது. எனவே, எளிய சர்க்கரைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
இதை ஒப்புக்கொண்ட மூத்த ஆலோசகர் தலையீட்டு இருதயநோய் நிபுணரும், ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் கேத் லேப் இயக்குநருமான டாக்டர் பாரத் விஜய் புரோஹித், சர்க்கரை-இனிப்பு பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். “இந்த கட்டுரையில், தேநீர் மற்றும் காபி போன்ற பிற பானங்களை குடிப்பது நன்மை பயக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, இந்த பானங்கள் ஒரு நாளைக்கு மிதமான அளவில் (3-4 கப் அல்லது 700-900 மில்லி) குடித்தால் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
பதப்படுத்தப்பட்ட மாவுக்குப் பதிலாக நீண்ட நேரம் எடுக்கும் நச்சினி மற்றும் பஜ்ரா போன்ற 'சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை' சாப்பிடுமாறு டாக்டர் சத்ரபதி அறிவுறுத்தினார். “இவை ரத்தத்தில் சர்க்கரையின் வேகத்தை குறைக்கின்றன. இதனால், இன்சுலின் உச்சம் குறைகிறது” என்று அவர் கூறினார். மிதமான அளவுகளில் காஃபின் கார்டியோபிராக்டிவ் என்பதால், கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் அல்லது தண்ணீரில் காபி/டீ சாப்பிடுவது நல்லது.
கூடுதலாக, டாக்டர் புராஹோட், பாலிஃபீனால் என்ற கலவை இருப்பதால், குறிப்பாக க்ரீன் டீயில் இருப்பதால், கருப்பு தேநீரில் இல்லை. மேலும்,பெர்ரி, சாக்லேட் மற்றும் சிவப்பு ஒயின் ஆகியவற்றிலும் இது நன்மை பயக்கும் என்று கூறினார். “இது இரத்த நாளங்களின் குறைவான விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிடிப்பைக் குறைக்கிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, உடலில் வீக்கத்தைக் குறைக்கிறது. ரத்தத்தில் புரோகோகுலண்ட் (ரத்தம் உறைதல் போக்கு) செயல்பாட்டைக் குறைக்கிறது. இதனால், இதயப் பாதுகாப்பு விளைவை அளிக்கிறது. இந்த பானங்களை அதிகமாக உட்கொள்வது முக்கியமாக காஃபின் மற்றும் டானின் இருப்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவை கவலை, தலைவலி, தூக்கமின்மை, அஜீரணம், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த பானங்களை குடிக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும், மேலும், அதிகப்படியான குடிப்பழக்கத்தில் ஈடுபட வேண்டாம்” என்று அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.