கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
சம்மர் ஸ்பெஷல் ஃபுல்ஜார் சோடா வீட்டிலேயே எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம். சாலையோர கடைகளில் மிகவும் ஃபேமஸாக இருக்கும் இந்த சோடாவை இனி வேட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
புதினா இலை பச்சை மிளகாய் - 4 நறுக்கியது இஞ்சி - 1 துண்டு நறுக்கியது உப்பு - 1 தேக்கரண்டி எலுமிச்சைபழச்சாறு ஊறவைத்த சப்ஜா விதைகள் சர்க்கரை பாகு சோடா
செய்முறை
ஒரு கிண்ணத்தில் சப்ஜா விதைகள் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். மிக்ஸி ஜாரில் புதினா இலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் இன்றி அரைக்கவும். பின்பு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
ஃபுல்ஜார் சோடா செய்ய ஒரு சிறிய டம்ளரில் எலுமிச்சைபழச்சாறு, புதினா மசாலா விழுது, ஊறவைத்த சப்ஜா விதைகள், சர்க்கரை பாகு சேர்த்து கலந்து விடவும். இறுதியாக ஒரு பெரிய டம்ளரில் முக்கால் அளவு சோடா சேர்த்து சிறிய டம்ளரில் தயார் செய்ததை எடுத்து சேர்க்கும் போது சிறிய டம்ளரில் உள்ள பொருட்கள் அனைத்தும் மேலே பொங்கி வரும். ஒரு முறை கலந்து விட்டு ஃபுல்ஜார் சோடாவை குடிக்கலம்.