பித்தப்பைக் கற்கள் என்பது பித்தத்தின் படிவுகள் ஆகும். அவை கட்டியாக திடப்படுத்தப்பட்டு உடலின் பித்தப்பையில் தங்கும். பித்தம் என்பது கல்லீரலால் உருவாக்கப்பட்ட ஒரு செரிமான திரவம் மற்றும் பித்தப்பையில் சேமித்து இருக்கும் கொழுப்பு ஆகும்.
பித்தப்பை கட்டிகள் வலியை ஏற்படுத்தவில்லை என்றாலும் பித்த நீர் பாதையில் தங்கி நாளடைவில் வலியை ஏற்படுத்தும். பித்தப்பை கட்டிகள் தங்களிடம் இருப்பது கூட நிறைய பேருக்கு தெரியாது. இருப்பினும், பித்தப்பைக் கற்கள் உங்கள் பித்தநீர் பாதை வழியாக செல்ல ஆரம்பித்து ஒரே இடத்தில் தங்கிவிட்டால், அவை ஆபத்தானதாக மாறிவிடும்.
இதனால் பித்தபாதை தடுக்கப்பட்டு வலி அசௌகரியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பித்தப்பைக் கற்கள் அறிகுறிகளைக் காட்டாமல் இருக்கலாம், ஆனால் பித்தப்பைக் கற்களால் குழாயில் ஏற்படும் அடைப்புகள் பல்வேறு அறிகுறிகளையும் வலிகளையும் ஏற்படுத்தும்.
பித்தப்பை கற்கள் ஏற்பட வாய்ப்புகள்:
- பித்தப்பை கற்கள் ஏற்பட கூடிய உணவுகள் என்ன என்று தெளிவான விளக்கம் இதுவரை இல்லை
- இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாமை
- காலை உணவை சாப்பிடாமல் இருப்பது
- இரவு உணவை தாமதாக சாப்பிடுவது
- குறைவான நார்ச்சத்து சாப்பிடுவது
- மன உளைச்சல், பதட்டம்
இதனை குணப்படுத்தும் வழிமுறைகளாக மருத்துவர் சிவராமன் கூறுவது,
சாப்பாட்டை செம்மை படுத்தினாலே போதும் பித்தப்பை கற்களில் இருந்து விடுபடலாம்.
பித்தப்பை கற்கள் இருக்கிறதா என்று அறிய முதுகின் பின்புறம் வலது பகுதியில் விலா எழும்பின் கடைசியில் உள்ளங்கை வைத்து அழுத்தி பார்த்தால் வலி இருக்கா வீக்கம் இருக்கா என பித்தப்பையை சோதனை செய்யலாம்.
பித்தப்பை கற்கள் இருப்பதை அறிந்தால் உடனே அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. முதலில் உணவுப் பழக்கம் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமல் இதனை எப்படி குணப்படுத்தலாம் என்று கண்டறிய வேண்டும்.
பித்தப்பை கல் குணமாக இப்படி செய்யுங்க | Dr.Sivaraman speech on gall bladder stone treatment
பித்தப்பை கற்கள் நீங்க நிறைய நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுக்க வேண்டும். வாழைப்பூ, வாழைத்தண்டு, கோழிக்கறி போன்ற உணவுகளை எடுக்கலாம். உணவில் இந்த கட்டுப்பாடுகளை வைத்து கொண்டு தினமும் சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் வழிகாட்டுதல் படி உணவு கட்டுப்பாடு அல்லது அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். மற்றவர்கள் உணவு பழக்கத்தின் மூலமே இதனை சரிசெய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“