பிரியாணி, கறிக்குழம்பு என அனைத்து வகையான சமையலுக்கும் சேர்க்கப்படும் கரம் மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மல்லி - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
நட்சத்திர சோம்பு -8
பட்டை - 2
ஜாவித்ரி - 4
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 20
மிதமான சூட்டில் அனைத்தையும் வதக்கி நன்கு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்து கொள்ளவும். இவற்றை மிதமான சூட்டில் வதக்க வேண்டும். கருக விடக்கூடாது. கருகினால் கசப்பு தனமை வந்து விடும்.
அரைத்து எடுத்த மசாலாவை ஆற வைத்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கலாம். ஈரம் படக்கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“