/indian-express-tamil/media/media_files/2025/02/03/b55EHUJXDJ3HSkVg9YDq.jpg)
பூண்டு முட்டை வறுவல்
வாயுத்தொல்லை அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். ஆனால் அன்றாடம் உணவுகளில் பூண்டை சேர்த்து கொள்வதன் மூலம் வாயுத்தொல்லையை குணப்படுத்த உதவும். அப்படிப்பட்ட பூண்டு பயன்படுத்தி பூண்டு முட்டை வறுவல் செய்வது எப்படி என்று ஹோம்குக்கிங் தமிழ் சேனலில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பூண்டு மசாலா அரைக்க
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
பட்டை
கிராம்பு - 3
மிளகு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
புளி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு முட்டை வறுவல் செய்ய
முட்டை - 6
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு
கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, மிளகு, பூண்டு, புளி, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும். இப்போது அகலமான கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் மற்றும் 2 காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும். பின்னர் கிளறாமல் முட்டைகளை உடைத்து அப்படியே ஊற்றவும்.
பூண்டு முட்டை வறுவல் | Garlic Egg Fry Recipe In Tamil | Side Dish For Rice | Egg Recipes
தற்போது கடாயை மூடி 5 நிமிடம் வேக வைக்கவும். முட்டைகள் ஒரு பக்கத்தில் சமைத்தவுடன், அதனை பெரிய துண்டுகளாக வெட்டி மீண்டும் சமைக்க வேண்டும். முட்டை துண்டுகளை கடாயின் ஓரத்தில் தள்ளி எண்ணெயை நடுவில் சேர்த்து அதில் அரைத்த பூண்டு மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் முட்டையுடன் மசாலாவை சேர்த்து கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இறுதியாக மேலே நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விட்டு இறங்கினால் சுவையான பூண்டு முட்டை வறுவல் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.