இந்த ஒரு குழம்பு சாப்பிட்டால் போதும்... வாயுத் தொல்லைக்கு குட்பை சொல்லலாம்; இந்த மாதிரி செஞ்சு ருசிங்க!

ருசியான பூண்டு குழம்பு எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது உடலில் இருக்கும் வாயுத் தொல்லையை முற்றிலும் போக்கும் மருத்துவ குணம் வாய்ந்தது.

ருசியான பூண்டு குழம்பு எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது உடலில் இருக்கும் வாயுத் தொல்லையை முற்றிலும் போக்கும் மருத்துவ குணம் வாய்ந்தது.

author-image
WebDesk
New Update
Garlic Gravy

உணவு என்பது ருசிக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அதன்படி, வாயுத் தொல்லையை போக்கும் பூண்டு குழம்பை எவ்வாறு ருசியாக செய்யலாம் என்று காணலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

1 கப் பூண்டு,
கால் கப் சின்ன வெங்காயம்,
2 தக்காளி,
கால் கப் மிளகாய் தூள்,
அரை கப் மல்லித்தூள்,
தேவையான அளவு உப்பு,
தேவையான அளவு மஞ்சள் தூள்,
புளி,
நல்லெண்ணெய்,
கடுகு, 
வெந்தயம் மற்றும்
கறிவேப்பிலை

செய்முறை:

Advertisment
Advertisements

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இவை பொறிந்து வரும் போதும், இத்துடன் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

இவை சற்று நிறம் மாறும் போது நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து மீண்டும் தாளிக்க வேண்டும். இதையடுத்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன் பின்னர், மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

இதன் பின்னர், மல்லித்தூள், புளி கரைசல் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். இப்போது, இந்தக் கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இவ்வாறு செய்தால் ருசியான பூண்டு குழம்பு தயாரகி விடும்.

Garlic

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: