உடலுக்கு பலம் தரக் கூடிய, வாய்வுத் தொல்லை நீங்க வீடு மணக்க மணக்க பூண்டு கார குழம்பு இதுக்கு முன்னாடி நீங்க செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? இதுக்கு முன்னாடி நீங்க செய்யல அப்படின்னா இனிமே இத செய்ய ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பூண்டு
வெங்காயம்
தக்காளி
எண்ணெய்
கடுகு
மிளகாய்த் தூள்
சீரகம்
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
உப்பு
புளி கரைசல்
பூண்டு கார குழம்பு இந்த முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள் இனிமே வாய்வுத் தொல்லை பிரச்சனையே இருக்காது. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கடுகு இரண்டு காய்ந்த மிளகாய் ஒரு கைப்பிடி அளவுக்கு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
20 சின்ன வெங்காயத்தை இந்த எண்ணெயில் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்க வேண்டும். இதில் 10 பல் பூண்டு சேர்த்து மீடியம் ஃபிளேம்ல வச்சு வேக வைக்கவும். எண்ணெயில் இவை அனைத்தையும் நன்றாக வதக்கி சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
ஒரு 2 டீஸ்பூன் அளவுக்கு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின்னர் இதில் ஒரு பெரிய அளவிலான தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். இப்போ கொஞ்சமா புளித்தண்ணி சேர்த்துக்கலாம். முக்கியமாக இந்த புளி தண்ணியை ரொம்ப அதிகமா சேர்க்க கூடாது.
ஒரு கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்துட்டு கடைசியா காரமாக இருந்தால் புளித்தண்ணீர் சேர்த்துக்கலாம். கொஞ்சமா இதுல உப்பு போட்டு மூடி ஒரு 5 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து இறுதியாக பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நல்லா மீடியம் ஃபிளேம்ல குக் பண்ணீ எடுக்க வேண்டும்.
எண்ணெய் பிரிந்து அந்த பூண்டு குழம்பு வாசம் வீசும் போது இறக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“