சுடு சோற்றுடன் கம கம பூண்டுக் குழம்பு வைத்து சாப்பிடுவது சுவையான இருக்கும். பூண்டுக் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உரித்த பூண்டு – 1 கப்
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் – ¾ கப்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
கடுகு – ¼ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
மிளகு – ¼ டீஸ்பூன்
சீரகம் – ¼ டீஸ்பூன்
அரைக்க
பூண்டு – 4 பற்கள்
மிளகு – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
செய்முறை
புளி தண்ணீரில் மிளகாய்த் தூளைப் போட்டு கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். அடுத்து அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், மிளகு, சீரகத்தை ஒன்றன் பின்பு ஒன்றாகப் போட்டு தாளிக்கவும். பிறகு உரித்த பூண்டுகளைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும். அடுத்து அதில் தயாரித்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். அவ்வளவு தான் வெங்காயம், தக்காளி இல்லாமல் குறைந்த பொருட்களில் கம கம பூண்டுக் குழம்பு ரெடி. இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டலாம் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“