சுவையான பூண்டு குழம்பு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
சுவையான பூண்டு குழம்பு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். பேச்சுலர் இந்த ரெசிபி-ஐ பிரிட்ஜில் வைத்து 3 நாள் வரை கூட சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்
வடகம்- தேவையான அளவு
கறிவேப்பிலை
பூண்டு - 20 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 1/2 முதல் 1 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி தூள் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி குழம்பு வடகம், கறிவேப்பிபிலை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் 20, 25 பூண்டு பல் நறுக்கி சேர்த்து வதக்கவும். எண்ணெய்யில் வதங்கியதும் அதில் குழம்பு மிளகாய்த் தூள், உப்பு, ஒரு கப் புளித் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
நன்கு கொதித்து வரும், குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் இந்த பதத்திற்கு வரும் போது இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பூண்டு குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“