சுகர்,பி.பி இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் வந்து விடும். அதனால் இதயநோய் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும்போது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அப்படிப்பட்ட கொலஸ்ட்ராலுக்கு சிறந்த வைத்தியம் ஒன்றை பற்றி மருத்துவர் நித்யா மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது,
முதலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை யாருக்கெல்லாம் வரும்,
- இரத்த கொதிப்பு அதிகம் உள்ளவர்கள்
- சர்க்கரை நோயாளிகள்
- மன அழுத்தம் மற்றும் மனசோர்வு
- தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் வரும்
- மூளை பாதிப்புகள்
- உணவு பழக்கம்
கொலஸ்ட்ரால் வருவதற்கான காரணங்கள்:
1. அதிக எண்ணெய் சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கிய காரணமாகும்.
2. நேரம் கடந்து உணவு சாப்பிடுவது உணவு நேரத்தை தினமும் மாற்றுவது உள்ளிட்டவையும் காரணமாகும்.
3. தூக்கமின்மை
கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கான அறிகுறிகள்
1. அதிக வியர்வை
2. படபடப்பு
3. உடல் பருமன்
4. மூச்சு விடுதலில் பிரச்சனை
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் செய்ய வேண்டியது:
எண்ணெய் உணவுகள் தவிர்க்கவும்
பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை தவிர்க்கவும்
உப்பு நிறைந்த உணவை தவிர்க்கவும்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவும்
சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும்
நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் சாப்பிட வேண்டும்
சிட்ரஸ் பழங்கள் - எலுமிச்சை, கருப்பு திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி பழங்களை வாரம் தினசரி அல்லது வாரத்தில் நான்கு நாட்களுக்கு ஒருமுறையாவது சாப்பிடலாம்.
கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு அருமருந்தாகவும் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த ஒரு பொருளே போதுமானது. அப்படியாக நாம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது பூண்டு.
செய்முறை: பூண்டை சிறிதாக நறுக்கி தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். உடலில் இருக்க கூடிய கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும். குறிப்பாக பூண்டை பச்சையாக காரத்தன்மையுடன் சேத்து சாப்பிடலாம். வேக வைக்க கூடாது.
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் மூலிகைகள்:
நத்தைச்சூரி சூரணம், சதைக்குப்பை, சீரகம், தேற்றன்கொட்டை, அதிமதுரம், லவங்கப்பட்டை, கொத்தமல்லி விதைகள் ஈவை அனைத்தையும் வைத்து செய்யப்படும் ஒரு மருந்து தான் சஞ்சீவி சூரணம்.
கெட்ட கொலஸ்ட்ரால் சர்ருன்னு குறையும் | Cholestrol control homeremedies | Healthtips | Mrladies
கொலஸ்ட்ரல் குறைய இந்த ஒரு மருந்து போதும் உடலில் நல்ல மாற்றம் தெரியும். சஞ்சீவி சூரணம் கொழுப்பை கரைத்து வெளியேற்றும். உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றும். அதுமட்டுமின்றி இதய கொழுப்பை கரைக்கும்.
இவ்வளவு நன்மை கொண்ட சஞ்சீவி சூரணத்தை வாங்கி வெந்நீரில் கலந்து இரண்டு வேலை குடிக்கலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
இதனால் கிடைக்கும் நன்மைகள்:
ஜீரண மண்டலம் சீராகும்
புத்துணர்ச்சி
சுறுசுறுப்பு
தைராய்டு குணமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.