காரைக்குடி ஸ்டைல் உணவிற்கு தனி சுவை உள்ளது. அப்படி காரைக்குடி ஸ்டைலில் வெந்தயக் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனைஸ் மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
வெந்தயத்தால் பெண்கள், ஆண்கள் இருவருக்கு பலவகைகளில் நன்மைகள் ஏற்படுகின்றன. அவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லாருக்குமே வெந்தயம் மிகுந்த நன்மைகளைத் தருகிறது.
உடல்சூடு, முடி வளர்ச்சி என அனைத்திற்கும் உதவுகிறது. எனவே வெந்தயத்தை வைத்து வெந்தயக்குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம்
பூண்டு
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
தக்காளி
கொத்தமல்லி இலைகள்
துருவிய தேங்காய்
சீரகம்
கருப்பு மிளகு
புளி
வெங்காயம்
பூண்டு
பச்சை மிளகாய்
குழம்பு தூள்
கொத்தமல்லி தூள்
உப்பு
வெந்தயம்
உளுத்தம் பருப்பு
வெல்லம்
நல்லெண்ணெய்
வெந்தயம் மற்றும் சீரகப் பொடி
செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் தேவையான அளவு வெந்தயம் போட்டு சிவக்க விடவும். பின்னர் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். வெந்தயம் உளுத்தம் பருப்பு சிவந்து வந்ததும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பூண்டு சேர்த்து வெங்காயம் எண்ணெயில் நன்கு வதங்கியதும் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்துள்ள தக்காளியும் சேர்த்து வதக்கி இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும். கருவேப்பிலையும் சேர்த்து மிதமான சூட்டில் வளர்க்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் வெள்ளை பூண்டு, மிளகு சேர்த்து மீடியம் பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
காரைக்குடி வெந்தய குழம்பு | Chettinad Vendhaya Kuzhambu in Tamil |CDK 1069 | Chef Deena's Kitchen
வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதில் மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து விடவும். மசாலாக்களின் பச்சை வாசனை நீங்கியவுடன் அதில் புளி கரைசல் மற்றும் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சிறிது சேர்க்கவும். வெந்தயம் சீரகத்தை வறுத்து பொடி செய்து வைத்துள்ள பவுடரை சிறிது அதில் சேர்க்கவும்.
மீடியம் சூட்டில் கொதி வந்ததும் இறக்குவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் வெல்லம் சேர்க்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசம் நீங்கியவுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். இதனை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.