பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. மக்கள் எல்லோரும் தயாராகி வருகின்றன. பொதுவாகவே பண்டிகை என்றால் புத்தாடை, இனிப்பு முக்கிய பங்கு வகிக்கும். அதுவும் இனிப்பு வகைகளை பலர் வீட்டிலேயே செய்து நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து அளித்து மகிழ்வர். குறிப்பாக கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகைக்கு வீடுகளில் முறுக்கு செய்வது வழக்கம். அந்தவகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு பூண்டு முறுக்கு செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 8
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் காய்ந்த மிளகாய், பூண்டு இரண்டையும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு நன்றாக சேர்த்து அரைக்கவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், எள், உப்பு, தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின் அதனுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்த பூண்டு மிளகாய் சேர்த்து கலக்கவும். இப்போது, முறுக்கு அச்சில் மாவு சேர்த்து முறுக்கு பிழியவும். ஒரு தட்டில் வட்ட வட்டமாக பிழிந்து எடுத்து வைக்கவும்.
இப்போது, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வட்டமாக பிழிந்து வைத்த முறுக்கு மாவை எண்ணெய்யில் போட்டு பொன் நிறமாக பொறித்து எடுக்கவும். அவ்வளவு தான் பொங்கல் முறுக்கு தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/