காஞ்சிபுரத்தில் பிரபலமான பூண்டு மிளகாய் தட்டை ரெசிபியை செஃப் தீனா பகிர்ந்துள்ளார். கமகம வாசம் வரும் இந்த ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையானவை
அரிசி மாவு - 1 கிலோ உளுத்தம் பருப்பு தூள் - 100 கிராம் சீரகம் - 5 கிராம் வெண்ணெய் - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 பூண்டு - 5 பல் பருப்பு - 50 கிராம் உப்பு - 20 கிராம் பெருங்காயத் தூள் - 5 முதல் 10 கிராம் எண்ணெய் - 2 லிட்டர்
செய்முறை
பூண்டு மிளகாய் தட்டை செய்ய முதலில் அரிசி மாவை ஊற வைத்து பொடியாக அரைத்து காய வைக்க வேண்டும். அடுத்து உளுத்தம் பருப்பு எடுத்து அதை வறுத்து இதனுடன் சேர்க்க வேண்டும். இப்போது கடாயில் அரிசி மாவு போட்டு உளுத்தம் பருப்பு அரைத்து தூள் செய்து சேர்க்கவும். அடுத்து சீரகம், பெருங்காயத் தூள் அடுத்து ஊற வைத்து வறுத்த கடலைப் பருப்பு, இடித்த மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இடித்த பூண்டு, உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது வெண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றவும். மாவு பதத்திற்கு பிசையவும். அதன் பின் கொஞ்சம் எண்ணெய் தொட்டு உருண்டையாக செய்து தட்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் கமகம பூண்டு மிளகாய் தட்டை ரெடி.