உங்கள் வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்களா? எது சாப்பிட்டாலும் கசக்குதா அப்போ அவங்களுக்கு பூண்டு சாதம் செய்து கொடுங்கள். சுவையான பூண்டு சாதம் செய்வது பற்றி செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
மிளகு சீரகம் பூண்டு உப்பு கருவேப்பிலை நெய்/ நல்லெண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
முதலில் மிளகு சீரத்தை தனித்தனியாக கொரகொரப்பாகக உடைத்துக் கொள்ளவும். பின்னர் தோலுரித்த பூண்டு எடுத்த அதில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியிலோ அல்லது மத்து வைத்தோ இடித்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் தட்டி வைத்த பூண்டு போட்டு வேகவிடவும். நிறம் மாறியதும் அதில் இடித்து வைத்துள்ள மிளகு சீரகத்தை தேவையான அளவு சேர்க்க வேண்டும்.
அடுத்தது கருவேப்பிலை சேர்த்து அனைத்தையும் வதக்கவும். உப்பு தேவைப்படும் அளவு சேர்த்துக் கொள்ளலாம். நன்கு வதங்கியதும் இதில் சிறிது சிறிதாக சாதம் சேர்த்து கிளறி விடவும்.
அவ்வளவுதான் மேலை செய்து கருவேப்பிலைகளை தூவி இறக்கினால் பூண்டு சாதம் ரெடி ஆகிவிடும். பூண்டு சாதம் சூடாக சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும் எனவே சூடாக இருக்கும் போதே பூண்டு சாதம் சாப்பிட்டு விடுவது நல்லது.