தோசை மற்றும் இட்லிக்கு எத்தனையோ சட்னி காம்பினேஷன் சாப்பிட்டிருப்போம். ஆனால், வெங்காயம் மற்றும் தக்காளி எதுவும் இல்லாமல் காரசாரமான பூண்டு கார சட்னி எவ்வாறு செய்யலாம் என்று இதில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்,
உளுத்தம் பருப்பு,
காய்ந்த மிளகாய்,
புளி,
பூண்டு,
இஞ்சி,
கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள்,
உப்பு மற்றும்
தண்ணீர்
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இத்துடன் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவை சேர்த்து 30 விநாடிகளுக்கு வதக்க வேண்டும். இதையடுத்து, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து 7 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
இதன் பின்னர், வறுத்து வைத்திருக்கும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது, தாளிப்பதற்காக அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
இத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் அரைத்து வைத்த கலவையை சேர்க்க வேண்டும். இதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான பூண்டு கார சட்னி தயாராக இருக்கும்.